Home Astology இன்றைய ராசி பலன் – 29.10.2021

இன்றைய ராசி பலன் – 29.10.2021

பிலவ வருடம் ஐப்பசி 12 ஆம் தேதி அக்டோபர் 29,2021 வெள்ளிக்கிழமை. அஷ்டமி திதி பகல் 02.10 மணி வரை அதன் பின் நவமி திதி,பூசம் பகல் 11.38 மணிவரை அதன் பின் ஆயில்யம் நட்சத்திரம். சந்திரன் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார். தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. சுக்கிரன் ஆசிகள் நிறைந்த வெள்ளிக்கிழமையான இன்றைய தினம் எந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் பரிகாரம் என்ன செய்வது என்று பார்க்கலாம்.

மேஷம்

சந்திரன் நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். சுகமும் சந்தோஷமும் நிறைந்த நாள். இன்று நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். பிள்ளைகளுக்காக சுப செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். வேலை செய்யும் இடத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். அம்மாவின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. திடீர் மருத்துவ செலவுகள் வரும்.

ரிஷபம்

சந்திரன் மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார்.இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்திருந்த உதவிகள் எளிதில் கிடைக்கும். போட்டி பொறாமைகள் குறையும். எடுக்கும் முயற்சிகளில் சகோதர, சகோதரிகளின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

மிதுனம்

சந்திரன் இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். வியாபார ரீதியான பணம் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். அஷ்டமத்து சனி, அஷ்டமத்து குருவால் சில சிக்கல்கள் வரலாம். கணவன் மனைவி இடையே விட்டு கொடுத்து சென்றால் இருக்கும் பிரச்சினைகள் சற்று குறையும்.

READ MORE >>>  இன்றைய ராசிபலன்கள் - 11/11/2021, கடக ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்

கடகம்

சந்திரன் உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். எடுக்கும் காரியங்களை தடையின்றி செய்து முடிப்பீர்கள். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் நன்மைகள் ஏற்படும். இன்று உங்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். கடன் பிரச்சினைகள் நீங்கும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். பெரிய அளவில் முதலீடுகளைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

சிம்மம்

சந்திரன் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் சுப விரைய செலவுகள் வரும்.
வண்டி வாகனங்களால் சிறு விரயங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் வருமானம் ஓரளவு சிறப்பாக இருக்கும். லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. திடீர் மருத்துவ செலவுகள் வரும்.

கன்னி

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். தொழில் வியாபாரத்தில் லாபம் வரும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். இன்று உற்சாகமுடனும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும்.

துலாம்

சந்திரன் இன்று பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.
செய்யும் தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் லாபம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள்.

READ MORE >>>  இன்றைய ராசிபலன் - 13.08.2021

விருச்சிகம்

சந்திரன் பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் உற்சாகத்துடனும் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வீடு தேடி வரும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உங்கள் திறமைகள் மற்றவர்களால் பாராட்டப்படும்.

தனுசு

சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாவது வீட்டில் பயணம் செய்கிறார். சந்திராஷ்டமம் நீடிப்பதால் வீண் வாக்குவாதம் தவிர்க்கவும். அலுவலகத்தில் மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனமுடன் பேச வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாக செல்வது நல்லது. இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். வீண் பிரச்சினைகள் உங்களை தேடி வரும்.

மகரம்

சந்திரன் உங்கள் ராசிக்கு ஏழாவது வீடான களத்திர ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் நல்ல ஆர்வம் காட்டுவார்கள். நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

கும்பம்

சந்திரன் உங்கள் ராசிக்கு ஆறாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். தொழில், வியாபாரத்திற்கு கடன் முயற்சி செய்யலாம். பயணங்களால் நன்மை ஏற்படும்.

மீனம்

சந்திரன் உங்கள் ராசிக்கு ஐந்தாவது வீட்டில் பயணம் செய்கிறார். பிள்ளைகளால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றும். குழந்தைகள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். செய்யும் தொழில், வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடுகளைத் தவிர்க்கவும். புதிய பொருட்கள் வாங்குவதில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. சொத்து விவகாரங்களில் ஒருமுறைக்கு இருமுறை விசாரித்து வாங்குவது நல்லது. திருமணம் சுப காரியம் தொடர்பாக இன்றைக்கு பேசி முடிக்கலாம்.

READ MORE >>>  இன்றைய ராசிபலன் - 19.08.2021

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articleமரண அறிவித்தல்
Next articleவங்கிகளில் கடன் பெற காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி!