Home Astology இன்றைய ராசி பலன் – 28.10.2021

இன்றைய ராசி பலன் – 28.10.2021

பிலவ வருடம் ஐப்பசி 11 ஆம் தேதி அக்டோபர் 28,2021 வியாழக்கிழமை. சப்தமி திதி பகல் 12.49 மணி வரை அதன் பின் அஷ்டமி திதி, புனர்பூசம் காலை 09.41 மணிவரை அதன் பின் பூசம். சந்திரன் இன்றைய தினம் கடக ராசியில் பயணம் செய்கிறார். தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

சந்திரன் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.
சுப காரியங்கள் தடைகளைத் தாண்டி வெற்றியடையும். பிள்ளைகளின் படிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே நெருக்கமும் சந்தோஷமும் அதிகரிக்கும்.

ரிஷபம்

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். போட்டி பொறாமைகள் குறையும். உடன் பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் வீடு தேடி வரும். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்திருந்த உதவிகள் எளிதில் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் சகோதர, சகோதரிகளின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

மிதுனம்

சந்திரன் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு வியாபார ரீதியான பணம் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். பணவரவு தாரளமாக இருந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். கணவன் மனைவி இடையே விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகள் சற்று குறையும்.

READ MORE >>>  குருப்பெயர்ச்சி பலன்கள்- மிதுன ராசி

கடகம்

சந்திரன் உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். எடுக்கும் காரியங்களை தடையின்றி செய்து முடிப்பீர்கள். பெண்களுக்கு ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

சிம்மம்

சந்திரன் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். சுப காரியங்களில் செலவுகள் அதிகரிக்கும்.
இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். வண்டி வாகனங்களால் சிறு விரயங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை இருந்தாலும் வருமானம் ஓரளவு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உயரதிகாரிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

கன்னி

சந்திரன் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும்.

துலாம்

சந்திரன் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிக்கும் நாளாக இந்த நாள் அமையும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நற்பலன் கிடைக்கும். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். அலுவல் ரீதியான பயணங்களால் நன்மைகள் ஏற்படும்.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 25.09.2021

விருச்சிகம்

சந்திரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். கடந்த இரண்டு நாட்களாக இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். உங்கள் திறமைகள் மற்றவர்களால் பாராட்டப்படும். புதிய நபர் அறிமுகம் கிட்டும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி ஏற்படும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

தனுசு

சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் நடைபெறுவதால் மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனமுடன் பேச வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். வீண் பிரச்சினைகள் உங்களை தேடி வரும். வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்ள வேண்டாம். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

மகரம்

களத்திர ஸ்தானத்தில் உள்ள சந்திரனின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் நல்ல ஆர்வம் காட்டுவார்கள். திருமண பேச்சு வார்த்தைகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். வங்கி கடன் பெறுவதற்கான முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

கும்பம்

சந்திரன் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் நீங்கும். ஆலய தரிசனம் செய்வீர்கள் குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

READ MORE >>>  இன்றைய ராசிபலன் - 25.07.2021

மீனம்

சந்திரன் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப் பலனை அடையலாம். புதிய எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்குவதில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articleதற்கொலைகளை கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறையை உருவாக்குமாறு உப தவிசாளர் துரைநாயகம் கோரிக்கை!
Next articleதிருகோணமலையில் காட்டுப் பகுதியில் புதையல் தோண்டிய இரவர் கைது