Home Accident News மட்டக்களப்பில் பாரிய விபத்து காயமடைந்தவர் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி.

மட்டக்களப்பில் பாரிய விபத்து காயமடைந்தவர் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி.

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் இன்று (24) காலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த ஒருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கல்லடி, சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்துக்கு  முன்னால் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அக்கரைப்பற்றில் இருந்து மட்டக்களப்பை நோக்கிவந்த பஸ், நாவற்குடா பிரதான வீதியில் உள்ள யு வளைவில் மோட்டார் சைக்கிளை திருப்ப முனைந்தவர் மீது மோதியுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்தவரை மோதிய பஸ் சிறிது தூரம் இழுத்துச்சென்றதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த விபத்தின்போது மோட்டார் சைக்கிளில் முழுமையாக சேதடைந்துள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

நொச்சிமுனையை சேர்ந்த சிவசம்பு சிவநேசதுரை என்னும் 70 வயதுடைய ஓய்வுபெற்ற அதிபர் ஒருவரே படுகாயமடைந்துள்ளார்.

இது தொடர்பில் பஸ் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த 3 அதி சொகுசு பஸ்கள் மடக்கி பிடிப்பு..!
Previous articleநவம்பர் 1 முதல் குறிப்பிட்ட போன்களில் செயலிழக்க உள்ள Whatsapp
Next articleகேரள கஞ்சாவுடன் சிக்கிய 18 வயது இளைஞன்