Home Local news அச்சுறுத்தலால் கைவிடப்பட்ட போராட்டம்!

அச்சுறுத்தலால் கைவிடப்பட்ட போராட்டம்!

விவசாயிகள் எதிர்கொள்ளும் உரப் பிரச்சினை மற்றும் கிருமிநாசினி இல்லாமல் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வடமாகாணத்தின் பல்வேறு பகுதிகளில், இன்று (18) காலை, விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், உரும்பிராய் கமநல சேவை நிலையத்துக்கு முன்பாக விவசாயிகள் மேற்கொள்ள இருந்த போராட்டத்தை, பொலிசார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நிறுத்தியுள்ளனர்.

அத்துடன், போராட்டத்துக்கு வந்திருந்தவர்களை இராணுவத்தினரும் கோப்பாய் பொலிஸாரும் அச்சுறுத்தியுள்ளனர். அச்சுறுத்தலுக்கு பயந்து விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு சென்றுள்ளனர்.

சீருடை தரித்தவர்களின் அச்சுறுத்தல் காரணமாக, போராட்டத்தை மேற்கொள்ள முடியாமல் போனதாக, போராட்டத்துக்கு வந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  குடும்ப வன்முறை தீவிரம் - 14 வயது சிறுவன் சுட்டுக்கொலை
Previous articleகிளாலி பகுதியில் தனியார் காணியை கடற்படைக்கு வழங்க முயற்சி!
Next articleஇரு திருமணங்கள் செய்யாத ஆண்களுக்கு சிறை;