Home Local news தமிழர்கள் மீது தாக்குதல் நடத்திய பெரும்பான்மையினர்!

தமிழர்கள் மீது தாக்குதல் நடத்திய பெரும்பான்மையினர்!

more news

காவத்தை வட்டபொத்த தோட்டத்தில் தமிழர்கள் பலர் பெரும்பான்மையினரால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் தாக்கப்பட்ட தோட்டப்புற மக்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உப செயலாளர் ரூபன் பெருமாள் உறுதியளித்தார். குறித்த தோட்டத்தின் அண்மித்த யடாகர கிராமத்தில் வசித்து வரும் பெரும்பான்மையின கும்பல் தோட்ட குடியிருப்பு வாசிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் தமிழ் இளைஞர்கள் மூவரும்,அவர்களது தாயரும் பலத்த காயமடைந்து கஹவத்த ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த ரூபன் பெருமாள் சம்பவ இடத்துக்கு நேரடியாகச் சென்று அச்சத்தில் வாழும் மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அதன் பிறகு இவ்விடயம் குறித்து இரத்தினபுரி மாவட்டத்தின் பொறுப்பான பொலிஸ் மா அதிபருக்கு தெரிவித்ததோடு. பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டைமான் மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதுபாண்டி ராமேஸ்வரன் ஆகியோருக்கும் தெரியப்படுத்தினார்.

இந்த சம்பவத்தின்போது தோட்ட குடியிருப்பு ஒன்றும் நான்கு முச்சக்கர வண்டிகளும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான செயல்களை வன்மையாக கண்டிப்பதோடு , மக்களுக்கு தான் துணை நிற்பதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உப செயலாளர் ரூபன் பெருமாள் தெரிவித்துள்ளார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

READ MORE >>>  தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீக்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

Previous articleதொலைபேசி இலக்கங்களை மாற்றாமல் வலையமைப்பை மாற்றலாம்.
Next articleஇணைய விளையாட்டை தடைசெய்ய விண்ணப்பம்;