Home CRIME NEWS வரகாபொலவில் வாய் ஒட்டிய நிலையில் சடலம் மீட்பு!

வரகாபொலவில் வாய் ஒட்டிய நிலையில் சடலம் மீட்பு!

more news

வாய் பிலாஸ்டர் ஒன்றினால் கட்டப்பட்ட நிலையில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வரகாபொல – துல்ஹிரிய பிரதேசத்தின் மாஓயாவில் குறித்த சடலம் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது தேசிய அடையாள அட்டை ஒன்றும் உயிரிழந்தவரின் உடலுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது,

இந்நிலையில், அதன் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதன்படி, குறித்த நபர் கடந்த 10ம் திகதி காணாமல் போனதாக உயிரிழந்த நபரின் மனைவி பன்னலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

காணாமல் போனவரின் மனைவியை தொடர்பு கொண்ட பொலிஸார் உடலை அடையாளம் கண்டுள்ளனர். 43 வயதுடைய அரத்தன, உடுகம பிரதேசத்தை சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  அன்டிஜன் பரிசோதனை செய்ய எவரும் இல்லை- நோயாளர்கள் அவதி
Previous articleஇன்றைய ராசி பலன் – 14.10.2021
Next articleவில் மற்றும் அம்பு கொண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் ஐவர் உயிரிழப்பு பலர் காயம்.