Home Astology இன்றைய ராசி பலன் – 14.10.2021

இன்றைய ராசி பலன் – 14.10.2021

more news

பிலவ வருடம் புரட்டாசி 28 ஆம் தேதி அக்டோபர் 14,2021 வியாழக்கிழமை. நவமி திதி மாலை 06.53 மணி வரை அதன் பின் தசமி திதி. உத்திராடம் காலை 09.35 மணிவரை அதன் பின் திருவோணம் நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் மகர ராசியில் பயணம் செய்கிறார். மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம். இன்று சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை பண்டிகை.

மேஷம்

சந்திரன் பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகள் மூலம் குடும்பத்தில் அனுகூலம் கிட்டும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். சேமிப்பு உயரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும்.

ரிஷபம்

சந்திரன் ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். கடந்த 2 நாட்களாக இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் நிம்மதி குறையலாம். வண்டி, வாகனங்கள் மூலம் வீண்செலவுகள் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. வெளியில் இருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

மிதுனம்

சந்திரன் எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. மற்றவர் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது உத்தமம். வெளியிடங்களில் பேசும் போது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.

READ MORE >>>  இன்றைய ராசிபலன்- 11/07/2021

கடகம்

சந்திரன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் தனவரவு வீடு தேடி வரும். புதிய பொருட் சேர்க்கை ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். உத்தியோகத்தில் கடினமான வேலைகளை கூட சக ஊழியர்களின் உதவியோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

சிம்மம்

சந்திரன் ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். பெண்களுக்கு மன நிம்மதி ஏற்படும். நண்பர்களால் நன்மைகள் உண்டாகும். இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

கன்னி

சந்திரன் ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல செய்தி தேடி வரும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய நட்பு உண்டாகும். எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும்.

துலாம்

சந்திரன் நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் மூலம் வீண் பிரச்சினைகள் தோன்றும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களில் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன்களும் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

விருச்சிகம்

சந்திரன் மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிட்டும். வேலையில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

READ MORE >>>  சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை! இன்றைய ராசிபலன்கள்

தனுசு

சந்திரன் இன்று இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் வந்து போகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் ஏற்படும். உற்றார் உறவினர்கள் மூலம் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.

மகரம்

சந்திரன் உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

கும்பம்

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று ஆரோக்கிய ரீதியாக சிறு பாதிப்பு உண்டாகும். உடன்பிறந்தவர்கள் வாயிலாக உதவிகள் வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்ல நன்மைகள் ஏற்படும். பண வருமானத்திற்கு ஏற்ப திடீர் செலவுகளும் வரும். பண பற்றாக்குறையினால் குடும்பத்தில் நெருக்கடிகள் ஏற்படலாம் கவனம் தேவை.

மீனம்

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும், வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் நல்ல லாபம் கிட்டும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 26.09.2021

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

Previous articleபோர்ப்ஸ் இந்தியா அட்டைப்படத்தில் நயன்தாரா: ரசிகர்கள் விமர்சனம்!
Next articleவரகாபொலவில் வாய் ஒட்டிய நிலையில் சடலம் மீட்பு!