Home Astology இன்றைய ராசி பலன் – 13.10.2021

இன்றைய ராசி பலன் – 13.10.2021

more news

பிலவ வருடம் புரட்டாசி 27 ஆம் தேதி அக்டோபர் 13,2021 புதன்கிழமை. அஷ்டமி திதி இரவு 08.08 மணி வரை அதன் பின் நவமி. பூராடம் பகல் 10.19 மணிவரை அதன் பின் உத்திராடம் நட்சத்திரம். சந்திரன் இன்று தனுசு ராசியில் பயணம் செய்கிறார். ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. புதன்பகவானின் ஆசி நிறைந்த இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

சந்திரன் இன்றைய தினம் பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் உங்களுடைய அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். இன்று உங்களுக்கு உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் உண்டாகும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்கள் சாதகமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

ரிஷபம்

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை.

மிதுனம்

சந்திரன் உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நண்பர்களால் நல்ல செய்திகள் தேடி வரும். குடும்பத்தில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும். வங்கி சேமிப்பு உயரும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

READ MORE >>>  இன்றைய ராசிபலன் - 18.08.2021

கடகம்

சந்திரன் உங்கள் ராசிக்கு ஆறாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். நினைத்த காரியம் நிறைவேறும்.

சிம்மம்

சந்திரன் உங்கள் ராசிக்கு ஐந்தாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை ஏற்படும். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். திருமண சுப முயற்சிகளில் முன்னேற்ற நிலை உண்டாகும். நண்பர்களின் உதவியால் வியாபார ரீதியான நெருக்கடிகள் குறையும்.

கன்னி

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று அலுவலகத்தில் மேலதிகாரிகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். வியாபாரத்தில் நண்பர்களின் ஆலோசனை நற்பலனை கொடுக்கும். வருமானம் பெருகும்.

துலாம்

சந்திரன் மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

விருச்சிகம்

சந்திரன் இன்று இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். உறவினர்கள் ஓரளவிற்கு உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி தேடி வரும்.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 10.10.2021

தனுசு

சந்திரன் உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். இன்று உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். கடன் பிரச்சினைகள் தீரும். சகோதர, சகோதரிகள் நட்புடன் இருப்பார்கள். வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்.

மகரம்

சந்திரன் இன்று உங்களுடைய ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். நண்பர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

கும்பம்

சந்திரன் இன்று உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் இருப்பதால் காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு தேடி வரும். உங்கள் பிரச்சினைகள் தீர உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுப காரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த கடன் பிரச்சினைகள் நீங்கும்.

மீனம்

சந்திரன் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் நன்மைகள் உண்டாகும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 09.10.2021

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

Previous article‘‘ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காவே பணம் அச்சிடப்படுகின்றது”
Next articleவவுனியா நோக்கி பயணித்த வாகனம் திடீரென தீப்பற்றியது!