Home Accident News ஏறாவூர் இளைஞர் மரணம்; காத்தான்குடியைச் சேர்ந்த ஆட்டோ சாரதி கைது!

ஏறாவூர் இளைஞர் மரணம்; காத்தான்குடியைச் சேர்ந்த ஆட்டோ சாரதி கைது!

more news

வாகன விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று (10) உயிரிழந்துள்ளார்.

கடந்த (3) ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இளைஞர் ஒருவர் வாகரை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதான வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் இளைஞர் சென்று கொண்டிருந்தபோது மாடு ஒன்று குறுக்கறுத்த நிலையில் எதிரே வந்த முச்சக்கர வண்டியில் மோதி விபத்துக்குள்ளாமை பொலிஸாரின் விசாரணையின்போது தெரிய வந்துள்ளது.

இவ்வாறு விபத்துக்குள்ளான இளைஞர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் காத்தான்குடியைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  அறுகம்பையிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்களை கடந்த 03 நாட்களாக காணவில்லை
Previous article8 பெண்களில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய்.
Next articleஇன்றைய ராசி பலன் – 12.10.2021