Home Local news மன்னாரிலும் ஆசிரியர்களால் போராட்டம் முன்னெடுப்பு

மன்னாரிலும் ஆசிரியர்களால் போராட்டம் முன்னெடுப்பு

more news

நாடு முழுவதும் இன்றைய தினம் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மன்னார் மாவட்டத்திலும் கவனயீர்ப்பு போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மன்னார் வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாகவும், ஆண்டங்குளத்தில் அமைந்துள்ள மடு கல்வி வலயத்திற்கு முன்பாகவும் இன்று காலை 10 மணியளவில் குறித்த போராட்டம் இடம்பெற்றிருந்தது.

குறித்த போராட்டமானது ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்கக் கோரியும், ஆசிரியர் – அதிபர் சம்பள பிரச்சினைகளுக்கு 87 நாட்கள் அரசாங்கம் தீர்வு வழங்காமையை சுட்டிக்காட்டியும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மன்னார் மற்றும் மடு கல்வி வலயத்தில் உள்ள அனைத்து ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்களும் இணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இலவச கல்விக்கு 6 வீதம் நிதி ஒதுக்கு, இலவச கல்வியை தனியார் மயப்படுத்தாதே, ஆசிரியர் தொழில் கௌரவத்தை உதாசீனப்படுத்தாதே, ஐந்தாயிரம் ரூபாய்க்கு அடிபணிய மாட்டோம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Gallery Gallery Gallery Gallery Gallery Gallery

திருகோணமலையிலும் ஆசிரியர்களின் கவனயீர்ப்புப் போராட்டம்

பூண்டுலோயா – தலவாக்கலை பிரதான வீதியில் லொறி விபத்து!

யாழில் 19 வயதான யுவதியின் விபரீத முடிவு!

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தரிற்கு நேர்ந்த பரிதாபம்
Previous articleதிருகோணமலையிலும் ஆசிரியர்களின் கவனயீர்ப்புப் போராட்டம்
Next articleயாழ். பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை