Home Astology இன்றைய ராசி பலன் – 06.10.2021

இன்றைய ராசி பலன் – 06.10.2021

more news

பிலவ வருடம் புரட்டாசி 20 ஆம் தேதி அக்டோபர் 06,2021 புதன்கிழமை. அமாவாசை திதி மாலை 04.35 மணி வரை அதன் பின் பிரதமை. ஹஸ்தம் இரவு 11.19 மணிவரை அதன் பின் சித்திரை நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் கன்னி ராசியில் பயணம் செய்கிறார். கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. புதன்பகவானின் ஆசி நிறைந்த இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். இன்று நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியில் முடியும். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளால் நன்மைகள் உண்டாகும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.

ரிஷபம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவு செய்வீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். உறவினர்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். சகோதரர்களின் உதவியால் பண நெருக்கடி குறைந்து மனநிம்மதி உண்டாகும்.

மிதுனம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமும் அக்கறையும் தேவை. இன்று உங்களுக்கு குடும்பத்தினருடன் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். எடுக்கும் காரியங்களில் சிறு சிறு இடையூறுகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களால் ஓரளவு சாதகமான பலன் உண்டாகும். திடீர் உதவிகள் தேடி வரும்.

READ MORE >>>  இன்றைய தினம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும் . பழைய கடன்கள் வசூலாகும்

கடகம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியும் சந்தோஷமும் தரக்கூடிய செய்திகள் வீடு தேடி வரும். பிள்ளைகளுடன் இருந்த மன ஸ்தாபம் நீங்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை கூடும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

சிம்மம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வங்கி சேமிப்பு உயரும். இதுவரை வராத கடன்கள் இன்று வசூலாகும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும்.

கன்னி

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் செய்யும் செயல்களில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வியாபாரத்தில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறும் சூழ்நிலை உருவாகும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

துலாம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் எதிர்பாராத இழப்புகளை சந்திக்க நேரிடும். மனஉறுதியோடு எதையும் எதிர்கொள்வீர்கள். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கடன் பிரச்சினைகள் தீரும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 20.10.2021

விருச்சிகம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இன்று உங்களுக்கு சுபசெலவுகள் செய்யகூடிய சூழ்நிலை உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகளின் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் ரீதியாக லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் வேலையில் உற்சாகத்துடன் ஈடுபடுவார்கள். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும். மூத்த சகோதரரின் மூலம் உதவிகள் லாபம் தேடி வரும்.

தனுசு

சந்திரன் இன்று பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். மன அமைதி குறைவதற்கான சூழ்நிலை உருவாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று தாமதநிலை ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் நற்செய்தி கிடைக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக இருப்பார்கள். சந்தோஷமான மனநிலையில் இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும்.

மகரம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீண் விரைய செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும்.

கும்பம்

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் சில பிரச்சினைகள் உருவாகும். வேலை செய்யும் இடத்தில் சிக்கல்கள் ஏற்பட்டு அமைதி குறையும். வெளி இடங்களில் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்க்கவும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பெரிய அளவில் முதலீடுகளைத் தவிர்க்கவும்.

READ MORE >>>  புத்தாண்டு பலன்கள் - கடக ராசி

மீனம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட திறமையுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணவரவு நன்றாக இருக்கும்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

Previous articleமனைவியை டீசல் ஊற்றி எரித்த கணவன்; முல்லைத்தீவில் சம்பவம்.
Next articleநாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் ஆசிரியர்கள்