Home Tamil News பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் வழமைக்கு திரும்பின!

பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் வழமைக்கு திரும்பின!

more news

சமூக ஊடக சேவைகளான பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பன சுமார் ஆறு மணி நேர செயலிழப்புக்கு பிறகு மீண்டும் இயல்புக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கிற்கு சொந்தமான இந்த மூன்று செயலிகளும் நேற்று இரவு செயல் இழந்தன. இதுவரை கண்டிராத மிகப்பெரிய தொழில்நுட்ப பிரச்சனையாக இது கருதப்படுகிறது.

பிரதான இரண்டு செயலிகளும் திடீரென செயலிழந்தமையினால் மில்லியன் கணக்கான பயனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

2019ஆம் ஆண்டு ஏற்பட்டமை போன்று பாரிய தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நெருக்கடி காரணமாக பேஸ்புக் நிறுவனத்திற்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமது சேவை ஸ்தம்பிதம் அடைந்துள்ளமை குறித்து பேஸ்புக் நிறுவனம் டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ளது. முகநூல் நிறுவனத்தின் செயலிகள் ஸ்ம்பித்துள்ளமை குறித்து இவ்வாறு பதிவிடப்பட்டுள்ளது.

சில பயனர்களினால் தமது சேவைகளை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகவும் விரைவில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனவும் முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பயனர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்காக வருந்துவதாக குறிப்பிட்டுள்ளது. இந்த தொழில்நுட்ப பிரச்சினையை வெகு சீக்கிரத்தில் சரி செய்து இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என பேஸ்புக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

READ MORE >>>  சிசுவிற்கு தாய் பாலில் நஞ்சை கலந்து கொடுத்த தாய்! நீதிமன்றத்தின் உத்தரவு

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

Previous articleஅஜித் வீட்டின் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு!
Next articleஜே.சி.பி. வாகனத்தில் வந்த மணமக்களால் பரபரப்பு!