Home Ampara news மாட்டுக்கு புல் வெட்டச் சென்று மாயமான நபர் கண்டுபிடிப்பு!

மாட்டுக்கு புல் வெட்டச் சென்று மாயமான நபர் கண்டுபிடிப்பு!

more news

புல் வெட்டுவதற்கு சென்ற நிலையில் காணாமல்போன 60 வயதுடைய  ஆண் ஒருவர் முதலைக்கடிக்கு உள்ளாகிய நிலையில் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள ஒலுவில் களியோடை ஆற்றில் சடலமாக இன்று (04) மீட்கப்பட்டுள்ளார் என  அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

நிந்தவூர் அட்டடைப்பள்ளத்தைச் சேர்ந்த 60 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஒருவரே சடலமாக மீட்டகப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த 2 ஆம் திகதி வீட்டில் இருந்து மாடுகளுக்கு புல்வெட்டுவதற்காக ஓலுவில் களியோடை ஆற்றின் கரைப்பகுதிக்கு சென்ற நிலையில் வீடு திரும்பாததனையடுத்து அவரை உறவினர்கள் தேடிவந்த நிலையில் அவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இந்நிலையில் இன்று காலை ஒலுவில் களியோடை ஆற்றில் முதலைக் கடிக்கு உள்ளாகிய நிலையில் ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் வீதிகளில் அலைந்து திரிந்தோருக்கு நடந்த தரமான சம்பவம்..!
Previous articleATM இயந்திரங்களை உடைத்து பணத்தை கொள்ளையிட்டவர் கைது!
Next articleஅஜித் வீட்டின் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு!