Home Local news தூக்கில் தொங்கிய நிலையில் இளம் தம்பதியர் சடலங்களாக மீட்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் இளம் தம்பதியர் சடலங்களாக மீட்பு!

more news

கம்பஹா மாவட்டம் மீரிகம பகுதயில் வீடொனில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் தப்பதியினர் நேற்று சடலங்களாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 23 மற்றும் 26 வயதுடையவர்கள். இவா்கள் சம்பவ இடத்திலேயே வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தூக்கில் தொங்கிய பெண்ணின் கைகள் இரண்டும் முதுகுக்குப் பின்பாக இணைத்துக் கட்டப்பட்டிருந்தன. கணவனின் உடல் பெண்ணின் உடலுக்கு அருகில் தூக்கில் தொங்கியவாறு காணப்பட்டது.

கணவர் தனது மனைவியை தூக்கிட்டுவிட்டு பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்த இருவரும் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்களாவர். இவர்களுக்கு நான்கு வயதில் குழந்தை ஒன்றும் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த ஆண் நேற்று மகனை தனது உறவினர் வீட்டில் விட்டுவிட்டு வந்திருந்தார் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  மன்னாரில் பொறியில் சிக்கிய திருடன்: கட்டிவைத்து நையப்புடைப்பு!
Previous articleஇன்றைய ராசி பலன் – 05.10.2021
Next articleஅக்கரப்பத்தனையில் முழுமைப்படுத்தப்பட்ட 101 வீடுகள் மக்களுக்கு கையளிப்பு!