Home Astology இன்றைய ராசி பலன் – 05.10.2021

இன்றைய ராசி பலன் – 05.10.2021

more news

பிலவ வருடம் புரட்டாசி 19 ஆம் தேதி அக்டோபர் 05,2021 செவ்வாய்க்கிழமை. சதுர்த்தசி திதி இரவு 07.04 மணி வரை அதன் பின் அமாவாசை திதி. உத்திரம் நள்ளிரவு 01.10 மணிவரை அதன் பின் ஹஸ்தம் நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் கன்னி ராசியில் பயணம் செய்கிறார். கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் மறையும். கடன் பிரச்சினைகள் தீரும். இன்று பிள்ளைகளால் வீட்டில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள்.

ரிஷபம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் வரும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் நிதானமாக நடந்து கொள்வது நல்லது. உடன் பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். மன நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும்.

மிதுனம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் அதிகரிக்கும். சகோதர, சகோதரிகள் வழியில் சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லை சற்று குறையும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் தேடி வரும்.

READ MORE >>>  இன்றைய நாள் உங்களிற்கு எப்படி

கடகம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடித்து விடுவீர்கள். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

சிம்மம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். வேலையில் தேவையில்லாத அலைச்சலால் மன நிம்மதி குறையும். பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் நிறைவேறும். சிக்கனமாக செயல்பட்டால் கடன்கள் ஓரளவு குறையும். நண்பர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும்.

கன்னி

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் நினைத்த காரியத்தை செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். சுப முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை கூடும். வெளியூர் பயணங்களில் புதிய நட்பு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். சேமிப்பு உயரும்.

துலாம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். சிக்கனமாக செயல்பட்டால் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் உண்டாகும்.

READ MORE >>>  இன்றைய ராசிபலன் - 04.08.2021

விருச்சிகம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். சிலருக்கு கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய பொருள் வீடு வந்து சேரும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியங்கள் கைகூடும்.

தனுசு

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவார்கள். தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியாக லாபம் கிட்டும்.

மகரம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடன் பிறந்தவர்கள் தேவையறிந்து உதவி செய்வார்கள்.

கும்பம்

சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று தொழில் வியாபாரத்தில் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது உத்தமம். வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. பணம் சம்பந்தப்பட்ட கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

மீனம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள்.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 23.10.2021

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

Previous articleவவுனியா கூமாங்குளத்தில் இளைஞன் ஒருவர் சடலமாக மீட்பு!
Next articleதூக்கில் தொங்கிய நிலையில் இளம் தம்பதியர் சடலங்களாக மீட்பு!