Home Astology இன்றைய ராசி பலன் – 04.10.2021

இன்றைய ராசி பலன் – 04.10.2021

more news

பிலவ வருடம் புரட்டாசி 18 ஆம் தேதி அக்டோபர் 04,2021 திங்கட்கிழமை. திரயோதசி திதி இரவு 09.05 மணி வரை அதன் பின் சதுர்த்தசி திதி. பூரம் மறுநாள் பின்இரவு 02.35 மணிவரை அதன் பின் உத்திரம் நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். மகரம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. சந்திரன் ஆதிக்கம் நிறைந்த திங்கட்க்கிழமையான இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்

சந்திரன் இன்றைய தினம் ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இன்று குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வெளியூர் பயணங்களால் நன்மைகள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

ரிஷபம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் உடல் நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் வீட்டில் அமைதி குறையும். முன்கோபத்தை குறைத்துக் கொண்டால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.

மிதுனம்

சந்திரன் இன்றைய தினம் 3ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

READ MORE >>>  சிம்ம ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்று

கடகம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பிள்ளைகள் வழியில் சிறு சிறு மனசங்கடங்கள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வேலை விசயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிடைக்கும்.

சிம்மம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்குள் பயணம் செல்கிறார். உறவினர்கள் வருகையால் இன்றைய தினம் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் செல்லும் பயணங்களில் புதிய நபர் அறிமுகம் உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள்.

கன்னி

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செல்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். ஆலய வழிபாடு மன அமைதியைத் தரும். சந்திரன் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் ஆதரவால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகும்.

துலாம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உறவினர்களுடன் இருந்த பகை விலகி ஒற்றுமை அதிகரிக்கும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

READ MORE >>>  இன்றைய ராசிபலன் - 09/06/2021, மீன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..

விருச்சிகம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார்.இன்று உங்களுக்கு சுபசெய்திகள் தேடி வரும். மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பெற்றோர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். இன்றைய தினம் நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.

தனுசு

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பயணங்களால் நன்மை ஏற்படும். வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் உண்டாகும். வீட்டில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் ஓரளவு குறையும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் ஆலோசனைகளால் வேலை செய்யும் இடத்தில் புதிய மாற்றம் ஏற்படும்.

மகரம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செல்கிறார். இன்று உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பிறரை நம்பி எந்த ஒரு பொறுப்புகளையும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதி காப்பது நல்லது. வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.

கும்பம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செல்கிறார். சந்திரன் உங்கள் ராசிக்கு நேர் எதிரே அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுகிறார். இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளால் நன்மை உண்டாகும். பெண்கள் ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகத்தால் லாபம் பெருகும். குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும்.

READ MORE >>>  உங்கள் ராசிக்கு இன்று வெற்றி உண்டாகும்

மீனம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செல்கிறார். ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சந்திரன் பயணம் செய்வதால் இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் தேடி வரும். திருமணம் சுப காரியங்கள் விசயமாக பேசலாம். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

Previous articleஇச்சிறுமியைக் காணவில்லை.
Next articleவிடுதி சுற்றிவளைக்கப்பட்டு இளம் பெண்கள் கைது!