Home Astology இன்றைய ராசி பலன் – 03.10.2021

இன்றைய ராசி பலன் – 03.10.2021

more news

பிலவ வருடம் புரட்டாசி 17 ஆம் தேதி அக்டோபர் 03,2021 ஞாயிற்றுக்கிழமை, துவாதசி திதி இரவு 10.30 மணி வரை அதன் பின் திரயோதசி திதி. மகம் மறுநாள் பின்இரவு 03.26 மணிவரை அதன் பின் பூரம் நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார்.
இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் காலதாமதம் உண்டாகும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.

ரிஷபம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். வேலையில் சக ஊழியர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் லாபம் அடையலாம். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

மிதுனம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்விக்கான புதிய முயற்சிகள் வெற்றி தரும். தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வேலையில் மேலதிகாரிகளால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் அமையும்.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 30.09.2021

கடகம்

சந்திரன் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. நெருங்கியவர்கள் மூலமாக வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சகோதர சகோதரி வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குரு பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் மன நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும்.

சிம்மம்

சந்திரன் உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த செயலையும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உடல் ஆரோக்கியம் சீராகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

கன்னி

சந்திரன் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் ஆதரவால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகும்.

துலாம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று சுப செலவுகள் செய்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் இருந்த இடையூறுகள் விலகும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும். சேமிப்பு உயரும். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சியை தரும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.

விருச்சிகம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் ரீதியாக லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். மறைமுக பகை நீங்கும். எண்ணியது நிறைவேறும்.

READ MORE >>>  மேஷ ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்று

தனுசு

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். கடந்த இரண்டு நாட்களாக இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இன்று வேலையில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருக்கும். வீட்டு செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம். நண்பர்களின் உதவியால் சிக்கல்கள் ஓரளவு குறையும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். எதிலும் பொறுமையுடனும் நிதானத்துடனும் இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடுகளைத் தவிர்க்கவும்.

மகரம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் சுணக்கம் ஏற்படும். மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. பெரிய அளவில் முதலீடுகளைத் தவிர்க்கவும்.

கும்பம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். சந்திரன் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. கணவன் மைனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். இன்று நீங்கள் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரம் சிறப்பாக இருக்கும்.

மீனம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு தேடி வரும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூரிலிருந்து வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும்.

READ MORE >>>  இன்றைய ராசிபலன் - 18/06/2021, கடக ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

Previous article3 வயது சிறுவனை பயன்படுத்தி தாயின் மோசமான காரியம்!
Next articleவானிலிருந்து வந்த மர்ம பொருளால் பரபரப்பு!