Home Indian news YouTube பார்த்து கருக்கலைப்பு செய்ய முயன்ற இளம்பெண் கவலைக்கிடம்

YouTube பார்த்து கருக்கலைப்பு செய்ய முயன்ற இளம்பெண் கவலைக்கிடம்

more news

இந்திய மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர் ‘YouTube’ பார்த்து கருக்கலைப்பு செய்ய முயன்று கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே உள்ள யசோதா நகரை சேர்ந்த 25 வயது பெண், ஆண் நண்பர் ஒருவருடன் பழகி வந்தார். இதில் அவர் கர்ப்பம் அடைந்தார்.

இதுபற்றி ஆண் நண்பரிடம் தெரிவித்தார். அதற்கு அவர் கருவை கலைத்துவிடும்படி கூறினார். மருத்துவமனைக்கு சென்று கருக்கலைப்பு செய்தால் அனைவருக்கும் தெரிந்துவிடும் என்பதால் ரகசியமாக கருக்கலைப்பு செய்ய முடிவெடுத்தனர்.

இதுசம்பந்தமாக YouTubeபில் சில வீடியோக்கள் இருப்பதை பார்த்து ஆண் நண்பர் அதுபற்றி அந்த பெண்ணிடம் கூறினார். YouTube வீடியோவை பார்த்து அதன்படி கருக்கலைப்பு செய்து கொள்ளும்படி கூறினார்.

அவர் சொன்னது போல YouTube வீடியோவை பார்த்தபடியே கருக்கலைப்பு முயற்சியில் அவர் ஈடுபட்டார். இதில் அவருக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. ரத்தப்போக்கு அதிகமாகி மயங்கிய நிலைக்கு சென்றார். இதுபற்றி அறிந்த உறவினர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது சம்பந்தமாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அவருடைய ஆண் நண்பர் யார் என்றும் விசாரித்தனர். சோயுப்கான் (வயது 31) என்பவர் தான் தனது நண்பர் என்று அந்த பெண் கூறினார்.

இதையடுத்து அவர் மீது பொலிஸார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.

மகளைத் தாக்கிய தந்தைக்கு 14 நாட்கள் மறியல்; வெள்ளவத்தையில் சம்பவம்.

எரிவாயுவின் விலையை 1200 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரிக்கை

14 வயதான மாணவி துஷ்பிரயோகம்: 65 வயதானவர் கைது!

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

READ MORE >>>  பொதுபட்டமளிப்பை நடத்த இணக்கம்.

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

Previous articleமகளைத் தாக்கிய தந்தைக்கு 14 நாட்கள் மறியல்; வெள்ளவத்தையில் சம்பவம்.
Next articleவவுனியாவில் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை!