Home Local news வவுனியாவில் மேலும் 49 பேருக்கு கோவிட் தொற்று உறுதி! மூவர் மரணம்

வவுனியாவில் மேலும் 49 பேருக்கு கோவிட் தொற்று உறுதி! மூவர் மரணம்

more news

வவுனியாவில் மேலும் 49 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதுடன், மூவர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று  இரவு வெளியாகின.

அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கோவிட் தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 49 பேருக்கு மேலும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும், கோவிட் தொற்று காரணமாக வவுனியாவில் நேற்றைய தினம்  மூவர் மரணமடைந்துள்ளனர்.

பெரியார்குளம் பகுதியைச் சேர்ந்த (வயது 66) பெண் ஒருவரும், கோவில்குளம் பகுதியைச் சேர்ந்த (வயது 69) பெண் ஒருவரும், பூம்புகார் பகுதியைச் சேர்ந்த (வயது 78) பெண் ஒருவரும் என மூவர் மரணமடைந்துள்ளனர்.

ஒன்லைன் வகுப்பிற்கு செல்லாத மாணவனை அடித்துக் கொன்ற தந்தை

நெடுந்தீவிற்குள் இரகசியமான முறையில் நுழைத்த மற்றுமொரு நாடு!

தென்னிலங்கையில் கைது செய்யப்பட்ட யாழ். இளைஞர்கள்! – விசாரணையில் வெளியான தகவல்கள்

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

READ MORE >>>  ஆசிரியரின் வீட்டில் திருடியவர் சிக்கினார்

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

Previous articleஒன்லைன் வகுப்பிற்கு செல்லாத மாணவனை அடித்துக் கொன்ற தந்தை
Next articleமட்டக்களப்பில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி: பிரேத பரிசோதனையில் ஏற்பட்ட திருப்பம்!