Home CRIME NEWS ஒன்லைன் வகுப்பிற்கு செல்லாத மாணவனை அடித்துக் கொன்ற தந்தை

ஒன்லைன் வகுப்பிற்கு செல்லாத மாணவனை அடித்துக் கொன்ற தந்தை

more news

தென்னிலங்கையில் தந்தை ஒருவர் மகனை படிப்பதற்காக கண்டித்தமையினால் ஏற்பட்ட காயம் காரணமாக மகன் உயிரிழந்துள்ளார்.

காலி, மஹமோதர, சியம்பலாஹேன பிரதேசத்தை சேர்ந்த கிம்ஹான் விமுக்தி என்ற மாணவனே உயிரிழந்துள்ளார். அவர் இம்முறை சாதாரண பரீட்சைக்கு ஆயத்தமாக இருந்தவராகும்.

குறித்த மாணவன் சில மாதங்களாக ஒன்லைன் கற்கை நடவடிக்கைகளில் ஈடுபடாமையினால் தந்தை கண்டித்துள்ளார்.

கோபம் காரணமாக மகனின் முதுகின் மீது துடைப்பத்தால் அடிக்க அடிக்க தந்தை முயற்சித்த போது அதனை தவிர்க்க மகன் முயற்சித்துள்ளார். இதன் போது அந்த தாக்குதல் அவரது தலையில் விழுந்தமையினால் மகன் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த மகன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.

தனது மகனை மிகவும் அன்பாக வளர்த்த தந்தை, கல்வி நடவடிக்கை இடைநடுவில் நின்றுவிடும் என்ற அச்சத்திலேயே தாக்கியுள்ளார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

நெடுந்தீவிற்குள் இரகசியமான முறையில் நுழைத்த மற்றுமொரு நாடு!

தென்னிலங்கையில் கைது செய்யப்பட்ட யாழ். இளைஞர்கள்! – விசாரணையில் வெளியான தகவல்கள்

காணாமல் போன அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சடலமாக மீட்பு

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  31 வயதான இளம் மருத்துவரின் உயிரைப் பறித்த கொரோனா!
Previous articleநெடுந்தீவிற்குள் இரகசியமான முறையில் நுழைத்த மற்றுமொரு நாடு!
Next articleவவுனியாவில் மேலும் 49 பேருக்கு கோவிட் தொற்று உறுதி! மூவர் மரணம்