Home Astology இன்றைய ராசி பலன் – 01.10.2021

இன்றைய ராசி பலன் – 01.10.2021

more news

பிலவ வருடம் புரட்டாசி 15 ஆம் தேதி அக்டோபர் 01,2021 வெள்ளிக்கிழமை. தசமி திதி இரவு 11.04 மணி வரை அதன் பின் ஏகாதசி திதி. பூசம் இரவு 02.57 மணிவரை அதன் பின் ஆயில்யம் நட்சத்திரம். சந்திரன் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார். தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. சுக்கிரன் ஆசி நிறைந்த இன்றைய தினம் எந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் பரிகாரம் என்ன செய்வது என்று பார்க்கலாம்.

மேஷம்

சந்திரன் இன்றைய தினம் நான்காம் வீட்டில் சுக ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு வழியில் உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். பண வரவு அதிகரிக்கும். வீடு வாகன பராமரிப்பு செய்யலாம். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ரிஷபம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். திருமண சுப காரிய முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். நல்ல செய்திகள் தேடி வரும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிட்டும். தொழில் ரீதியான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். வருமானம் அதிகரிக்கும். புதிய வேலைக்கு இன்றைய தினம் முயற்சி செய்யலாம்.

READ MORE >>>  இன்றைய ராசிபலன் - 22/06/2021, மிதுன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்

மிதுனம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்பத்தினருடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தவிர்க்கவும். உறவினர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும். பண பற்றாக்குறையை சமாளிக்க சிக்கனமாக செயல்படுவது நல்லது. கடன் வாங்குவதைத் தவிர்க்கவும்.

கடகம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். ராசியில் ஆட்சி பெற்று அமரும் சந்திரனால் மனதில் உற்சாகம் பிறக்கும். இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். பூர்வீக சொத்துக்கள் விற்பனை செய்வதால் லாபம் கிடைக்கும்.

சிம்மம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களின் உடல்நிலையில் சற்று மந்தநிலை காணப்படும். தேவையற்ற செலவுகளால் கடன் வாங்க நேரிடும். வீண் செலவுகளை தவிர்ப்பதன் மூலம் பணப்பிரச்சனை குறையும். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலப் பலன் ஏற்படும். உறவினர்கள் வழியில் உதவிகள் கிட்டும்.

கன்னி

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உறவினர்களால் சுப விரயங்கள் ஏற்படும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். வருமானம் பெருகும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். ஆரோக்கிய பிரச்சினைகள் தீரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சுப காரியங்கள் கைகூடி வரும்.

READ MORE >>>  மகர ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்று

துலாம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். செய்யும் தொழில் வியாபாராத்தில் நண்பர்களின் உதவியால் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் உதவி கிடைக்கும்.

விருச்சிகம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் வரும். வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் பிள்ளைகளுடன் ஏற்பட்ட வீண் மனஸ்தாபாங்கள் நீங்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் புதிய மாற்றங்கள் செய்வதன் மூலம் வெற்றி அடையலாம்.

தனுசு

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்வதால் நீங்கள் செய்யும் காரியங்களில் தடைகள் தாமதங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனமுடன் பேச வேண்டும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் தேவை. அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.

மகரம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் வீட்டிற்கு புதிய பொருட்கள் வந்து சேரும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். வியாபாரம் லாபகரமாக இருக்கும். கடன் பிரச்சினை நீங்கும். சந்திரன் பார்வை உங்கள் ராசியில் உள்ள சனி, குருவின் மீது விழுவதால் கணவன் மனைவி இடையேயான சிக்கல்கள் நீங்கும். பண வரவு அதிகரிக்கும்.

READ MORE >>>  இன்றைய ராசிபலன் - 11.08.2021

கும்பம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு நல்ல செய்திகள் வீடு தேடி வரும். பொருளாதாரம் நன்றாக இருக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும். உறவினர்கள் உதவி கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். வியாபாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பெண்கள் வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருள் வாங்குவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சில சிக்கல்கள் வரும் மருத்துவ செலவுகள் எட்டிப்பார்க்கும் கவனம் தேவை.

மீனம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உடல்நிலை பலவீனமாக காணப்படும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். தொழில் ரீதியாக அலைச்சலுக்கு பின் அனுகூலப் பலன் கிட்டும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். இதுவரை இருந்த கடன் பிரச்சினைகள் குறையும். ஆலய வழிபாடு மன அமைதியைத் தரும்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

Previous articleகாணாமல் போன அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சடலமாக மீட்பு
Next articleதென்னிலங்கையில் கைது செய்யப்பட்ட யாழ். இளைஞர்கள்! – விசாரணையில் வெளியான தகவல்கள்