Home Local news சுற்றிவளைப்பில் சட்டவிரோத மதுபானத்துடன் நால்வர் கைது!

சுற்றிவளைப்பில் சட்டவிரோத மதுபானத்துடன் நால்வர் கைது!

more news

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரால் நாட்டின் சில பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் சட்டவிரோத மதுபானத்துடன் நால்வர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் ராகமை பொலிஸ் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 330 லீற்றர் சட்டவிரோத மதுபானம், 1,660 லீற்றர் கோடா, 5 சமையல் எரிவாயு சிலிண்டர்கள், எரிவாயு அடுப்பு என்பவற்றுடன் 25 ,34 வயதுடைய ராகம பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோன்று கதிர்காமம் பொலிஸ் பிரிவில் கதிர்காமம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 20 லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் 41 வயதுடைய தெடலமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெயங்கொட பொலிஸ் பிரிவில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 67 லீற்றர் சட்டவிரோத மதுபானம், 717 லீற்றர் கோடா என்பவற்றுடன் 50 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

கண்டி – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையின் ரம்மியமான புகைப்படங்கள்!

காதலியின் அந்தரங்கப் படங்களை கணவனிற்கு அனுப்பிய மாணவனால் பரபரப்பு!

மதுபோதையில் வாகனம் செலுத்தியவருக்கு 50000 ரூபா தண்டம்!

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  முதியோர் கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு.
Previous articleகாதலியின் அந்தரங்கப் படங்களை கணவனிற்கு அனுப்பிய மாணவனால் பரபரப்பு!
Next articleநுவரெலியாவில் நீண்டவரிசையில் காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றம்!