Home Accident News இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து; 6 பேரின் நிலை

இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து; 6 பேரின் நிலை

more news

நுவரெலியா – அட்டன் பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு வீதியில் இன்று காலை மூன்று வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிய விபத்தில் 6 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்று கொண்டிருந்த வேன் ஒன்று தலவாக்கலை பகுதியிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்ற வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியதுடன், அருகில் இருந்த மண்மேட்டுடன் மோதி வீதியில் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதி குடைசாய்ந்துள்ளது.

குறித்த முச்சக்கரவண்டி தலவாக்கலை பகுதியிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. இந்தவிபத்தில் குடைசாய்ந்த வேனில் பயணித்த நால்வரும், முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்று கொண்டிருந்த வேனில் ஏற்பட்ட இயந்திர கோளாரே இந்த விபத்திற்கான காரணம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Gallery

 

யாழ். இளைஞர்கள் ஐவர் கம்பஹாவில் திடீர் கைது!

சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!

மட்டக்களப்பில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  இளைஞனிற்கு நேர்ந்த பரிதாபம்!! கதிரையில் அமர்ந்தவாறே பலியான சோகம்
Previous articleகண்டி – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையின் ரம்மியமான புகைப்படங்கள்!
Next articleமதுபோதையில் வாகனம் செலுத்தியவருக்கு 50000 ரூபா தண்டம்!