Home Tamil News இருமலுக்கும் காய்சசலுக்கும் வீட்டிலேயே மருந்து

இருமலுக்கும் காய்சசலுக்கும் வீட்டிலேயே மருந்து

more news

காய்ச்சல், சளி, இருமல் போன்ற உபாதைகள் ஆரம்பிக்கும் போது இயற்கையான வைத்தியம் மூலம் அதை சரி செய்யலாம் என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் டாக்டர். G.K.தாராஜெயஸ்ரீ BAMS இதற்கு அவர் தரும் குறிப்புகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

வெங்காயத்துடன் தேன்

Sri Lanka Tamil News

சாம்பார் வெங்காயம் ஒன்று அல்லது இரண்டு எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி தேனில் ஊறவிடவும். இரவு முழுவதும் அவை ஊறட்டும். மறுநாள் காலை வெங்காயத்துண்டுகளை மென்று சாப்பிடவும். இது போல் தினசரி மூன்று அல்லது நான்கு முறை மென்று சாப்பிடவும்

​எலுமிச்சைத்தோல்

எலுமிச்சைத்தோலை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். நீரை கொதிக்க வைத்து வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை தோலை சேர்த்து கொதிக்க விடவும். பிறகு இறக்கி குளிர வைத்து வடிகட்டி அதை குடிக்கவும். இந்த நீரை தொண்டை வரை நனைத்து வாய் கொப்புளிக்க பயன்படுத்தவும்.

பிரியாணி இலை 

உடலில் வலிமை சேர்க்கும் தேஜ் பட்டை அல்லது வளைகுடா இலைகள். - குமுதம் செய்தி தமிழ்

நீரை கொதிக்க வைத்து இரண்டு பிரியாணி இலைகளை சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு குளிர வைத்து தேநீராக்கி குடிக்கவும். தினமும் இரண்டு வேளை இதை குடித்து வந்தால் காய்ச்சலும் இருமலும் தீவிரமாகாமல் தடுக்கலாம்.

​சிறுவர்களுக்கு சளி

உணவில் இஞ்சி அவசியம் தான்... ஆனால் அதிக அளவு உணவில் சேர்த்துக் கொள்வதால் என்னென்ன ஆபத்து ஏற்படும் தெரியுமா...? - Health Diary Info

வளரும் குழந்தைகளுக்கு சளி தொற்று இருந்தால் வேப்ப எண்ணெயை சூடாக்கி குழந்தைகளின் மார்பு, கழுத்து மற்றும் முதுகுப்பகுதியில் தடவவும். இது தொற்றுநோயை குறைக்கும் சளியை வெளியேற்றி இயற்கையாக குணப்படுத்தும். சளி குறையும் வரை இதை செய்யலாம். அளவு குறைத்து பயன்படுத்துவது நல்லது.

​காய்ச்சலோடு நெஞ்சு எரிச்சல்

READ MORE >>>  கிணற்றிலிருந்து குழந்தையின் சடலம் மீட்பு- சந்தேகத்தில் தந்தை கைது!

நீரை கொதிக்க வைத்து ஒரு துண்டு தோல் உரித்த இஞ்சியை நசுக்கி அதில் மிளகுத்தூள் சேர்க்கவும். பிறகு இலேசாக கொதிக்க வைத்து ஐந்து நிமிடங்கள் வைத்து வடிகட்டி எடுக்கவும். பிறகு இனிப்புக்கு தேன் சேர்த்து நாள் ஒன்றுக்கு இரண்டு முறை குடித்து வந்தால் நெஞ்செரிச்சல் குணமாகும்.

இதனுடன் இரண்டு துளசி இலைகள் சேர்த்து குடிக்கலாம். அல்லது துளசி இலையை சாறெடுத்தும் குடிக்கலாம். இது இருமல் மற்றும் காய்ச்சல் இரண்டுக்கும் மருந்தாகிறது.

​இருமலுக்கு மருந்து

குரல் வளத்துக்கு ஆடாதோடை எனும் இயற்கை தந்த வரம்

இருமலுக்கு சிறந்த மருந்து ஆடாதோடை இலை. 100 மில்லி தண்ணீரில் இந்த இலைகளை கொதிக்க வைத்து ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை விடவும். பிறகு அடுப்பை அணைத்து இறக்கி இளஞ்சூடாக இருக்கும் போது 5 முதல் 10 மில்லி வரை கொடுக்கவும்.

தாந்திரிக்காய் பொடி மற்றும் தேனை குழைத்து சாப்பிட்டு வந்தால் இருமல் படிப்படியாக கட்டுக்குள் வரும்.

குழந்தைகளுக்கு இருமல் வந்தால் அரிசி கழுவிய தண்ணீருடன் தனியா தூள் மற்றும் நாட்டு சர்க்கரை சம அளவு கலந்து கொடுத்து வந்தால் குழந்தைக்கு இருமல் கட்டுப்படும்.

கிருஷ்ண துளசி அல்லது பிருங்கராஜ் இலைச்சாறு மீண்டும் மீண்டும் தேனுடன் சாப்பிட்டு வந்தால் இருமல் நீங்கும். தொண்டையில் அரிப்பு மற்றும் புண் இருந்தாலும் குணமாகும்.

கருநொச்சி இலையை மென்று சாப்பிடலாம். தொண்டை நோய்த்தொற்று குறையும். வீக்கம் குறையும். வசம்பு சேர்க்கலாம்.

​அடர்த்தியான சளி வெளியேற

தும்பைப்பூ எளிதாக கிடைக்கும். 100 மில்லி பாலில் தும்பைப்பூ கலந்து ஐந்து நிமிடங்கள் கொதிக்கவைத்து தினமும் குடித்து வந்தால் சளி முழுவதுமாக கரைந்து வெளியேறும்.

READ MORE >>>  43000 பேருக்கு தவறான கோவிட் முடிவுகளை வழங்கிய தனியார் பரிசோதனை மையம்

முட்டைகோஸ் இலை மற்றும் அதன் சாறு இருமலை குணப்படுத்தும். இதன் இலையை பொடியாக நறூக்கி உப்பு சேர்த்து வேகவைக்கவும். பிறகு வடிகட்டி சிட்டிகை மிளகுத்தூள் சேர்க்கவும். ஒரு வாரம் இதை செய்து வந்தால் சளி வெளியேறும்.

​சளியை வெளியேற்ற

நீராவி பிடிப்பது கொரோனவை குணப்படுத்தும்- வைரல் செய்தி உண்மையா?

ஒரு லிட்டர் தண்ணீரை வாயகன்ற குறுகிய பாத்திரத்தில் விட்டு அதில் உலர்ந்த இஞ்சி சேர்த்து கொதிக்க வையுங்கள். இந்த நீராவியை உள்ளிழுக்க செய்யுங்கள். மூக்கு மற்றும் வாய் வழியாக சளிக்கு முழுமையான தீர்வு கிடைக்க ஒரு வாரம் வரை இதை தொடர்ந்து செய்தால் பலன் கிடைக்கும்.

​காய்ச்சல் காலத்தில்

kaaichal kuraya: காய்ச்சலை குறைக்க பெரியவர்கள் என்ன செய்ய வேண்டும்? குழந்தைகளுக்கு என்ன செய்ய வேண்டும்? - Samayam Tamil

காய்ச்சல் சளி, இருமல் பிரச்சனை இருக்கும் போது தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்க்கவும். இந்த கலவையை தினசரி குடித்து வந்தால் உடலில் இருக்கும் நச்சுக்கிருமிகள் வெளியேறும்.

தேன், நெய் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து சம அளவு கலந்து பேஸ்ட் ஆக்கி நாக்கில் தடவி வரவும். காய்ச்சல் குறையும் வரை இதை செய்து வரலாம்.

காபியுடன் சிறிது நெய் சேர்த்து தினமும் காலையில் குடிச்சு பாருங்க

வீட்டு எதிரில் சிறுநீர் கழித்தவர் அடித்துக் கொலை;

வெறும் வயிற்றில் பப்பாளி பழம் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் உண்டாகும்?

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

READ MORE >>>  திறந்த ஓரிரு நிமிடங்களில் அலைமோதிய கூட்டத்திற்கு காத்திருந்த ஏமாற்றம்.

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

Previous articleஇலங்கையில் வீட்டு வாடகை சட்டத்தில் திருத்தங்கள்!
Next articleநாட்டில் விரைவில் பெற்றோல்,டீசல் விலையில் மாற்றம்?