Home Astology இன்றைய ராசி பலன் – 30.09.2021

இன்றைய ராசி பலன் – 30.09.2021

more news

பிலவ வருடம் புரட்டாசி 14 ஆம் தேதி செப்டம்பர் 30,2021 வியாழக்கிழமை. நவமி திதி இரவு 10.09 மணி வரை அதன் பின் தசமி திதி. புனர்பூசம் இரவு 01.33 மணிவரை அதன் பின் பூசம் நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு மாறுகிறார். விருச்சிக ராசிக்காரர்களுக்கும் இரவுக்கு மேல் தனுசு ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை.

மேஷம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று எந்த செயலிலும் புது உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். சிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் லாபம் அதிகரிக்கும் வங்கி சேமிப்பு உயரும்.

ரிஷபம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த செயலையும் நிதானத்துடனும் பொறுமையுடனும் செய்வது நல்லது. குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். வெளியூர் பயணங்களால் லாபகரமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்குள் இரவு வரை பயணம் செய்கிறார். இன்றைய தினம் பிள்ளைகளால் நன்மைகள் அதிகரிக்கும். வங்கி சேமிப்பு குறையும். தொழில் வியாபாரத்தில் ஏற்பட்ட மந்த நிலை நீங்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் உதவிகள் வீடு தேடி வரும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரும்.

READ MORE >>>  இன்றைய தினம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும் . பழைய கடன்கள் வசூலாகும்

கடகம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் திடீர் செலவுகள் வரும். பெற்றோர்களுக்கு மருத்துவ செலவுகள் செய்யும் சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகள் படிப்பிற்காக செலவுகள் செய்வீர்கள். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சிறு தடைக்குப் பிறகு அனுகூலப்பலன் உண்டாகும்.

சிம்மம்

சந்திரன் லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடி வரும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும் வங்கி சேமிப்பு உயரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

கன்னி

சந்திரன் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். உடன்பிறந்தவர்களின் வீட்டு சுபகாரியங்களில் பங்கேற்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.

துலாம்

சந்திரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று வேலை செய்யும் இடத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். திருமண சுப காரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி உண்டாகும். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.

விருச்சிகம்

சந்திரன் இன்று இரவு வரை எட்டாம் வீட்டில் பயணம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் பிரச்சினை வர வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக செலவுகள் ஏற்படும். சுப காரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். உங்கள் ராசிக்கு இரவு 07.00 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் கவனம் தேவை. குடும்பத்தில் இருந்த மன குழப்பங்கள் இரவுக்கு பின் குறைய வாய்ப்புள்ளது. தொழில் முதலீடுகளைத் தவிர்க்கவும்.

READ MORE >>>  இன்றைய ராசிபலன் - 05.08.2021

தனுசு

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். தம்பதியர் இடையே சந்தோஷ சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. இன்று உங்களுக்கு எதிர்பாராத சுப விரய செலவுகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு இரவு 7 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர்களின் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. வாகன பயணங்களில் கவனம் தேவை.

மகரம்

சந்திரன் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்வதால் இன்று உங்களுக்கு அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் தேடி வரும். பிள்ளைகளால் பெருமை சேரும். உத்தியோத்தில் புதிய நட்பு மகிழ்ச்சி அளிக்கும். கடன்கள் குறையும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடி வரும்.

கும்பம்

சந்திரன் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். பிள்ளைகளால் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். இன்று உங்களுக்கு வரவும் செலவும் சமமாகவே இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த காரியம் நிறைவேற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். பெரிய மனிதர்களின் அறிமுகம் வீடு தேடி வரும்.

மீனம்

சந்திரன் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் காலதாமதமாகும். நீங்கள் எந்த விஷயத்திலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். சின்னச் சின்ன சண்டைகள் வர வாய்ப்புள்ளது பேச்சில் கவனம் தேவை.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 08.10.2021

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

Previous articleகொரோனா தடுப்பூசிக்கு சென்றவருக்கு நாய் ஊசி செலுத்திய மருத்துவர்! பெரும் அதிர்ச்சி சம்பவம்
Next articleசாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!