Home Local news முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலருக்கு தொற்று உறுதி

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலருக்கு தொற்று உறுதி

more news

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட அரச திணைக்களங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கோவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுச் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் எனப் பலர் கோவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ளார்கள்.

மாவட்டத்தில் கிராமங்களில் பல மக்கள் தொற்றுக்கு இலக்காகி உள்ள நிலையில், நாளாந்தம் மேற்கொள்ளப்படும் அன்டிஜன் பரிசோதனைக்கோ அல்லது பி.சி.ஆர் பரிசோதனைக்கோ உட்படுத்தாத நிலையில் வீடுகளில் வாழ்ந்து வருவதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் மாவட்டத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் படி முல்லைத்தீவு மாவட்டத்தில் 25 பேர் கோவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 86 அகவையுடைய வயோதிபர் ஒருவர் கோவிட் தொற்று காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார்.

முள்ளியவளை தெற்கினை சேர்ந்த வயோதிபர் இவ்வாறு உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு பிரதேசத்தில் 3 பேரும், ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 3 பேரும், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 4 பேரும், வெலிஓயா பிரதேசத்தில் 10 பேரும், மாங்குளம் பிரதேசத்தில் ஒருவரும் மல்லாவி பிரதேசத்தில் 4 பேரும் என மாவட்டத்தில் 25 பேர் நேற்று (28) தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்கள்.

பிள்ளைகள் பொறுப்பேற்க மறுத்த தாயாரின் பராமரிப்பு செலவை பொறுப்பேற்ற யாழ் தொழிலதிபர்!

வவுனியா சிவானந்தா வித்தியாலயம் வரலாற்று சாதனை.

தமிழ்ப் பெண்கள் இருவர் திருமணம் செய்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

READ MORE >>>  உயரதிகாரிகளுக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

Previous articleரோல்ஸ் ரோய்ஸ் நிறுவனத்தின் புதிய மின்சாரக் கார்; ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிமீ பயணிக்கலாம்!
Next articleகொட்டகலையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 13 பேர் வைத்தியசாலையில்!