Home Local news கிளிநொச்சியில் ஒரே இரவில் 3 வீடுகளில் 31 பவுண் கொள்ளை.

கிளிநொச்சியில் ஒரே இரவில் 3 வீடுகளில் 31 பவுண் கொள்ளை.

more news

கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்லாற்று கிராமத்தில் மூன்று வீடுகளில் கொள்ளைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

நேற்றுமுன்தினம்(27) இரவு 6 பேர் கொண்ட கும்பல் முகங்களை மறைத்தவாறு வீடுகளுக்குள் புகுந்து வீடுகளிலிருந்தவர்களைக் கத்திமுனையில் மிரட்டி அவர்களிடம் இருந்த தங்க ஆபரணங்களைக் கொள்ளையடித்துள்ளார்கள்.

கத்தி உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் வீடு ஒன்றிற்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்து 19 பவுண் தங்க ஆபரணங்களைக் கொள்ளையடித்துள்ளதுடன், கிராமத்தில் மற்றும் ஒரு இடத்தில் உள்ள வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் 7 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர்.

மற்றும் ஒரு பகுதியில் உள்ள வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் 5 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையடித்துள்ளார்கள்.

பாதிக்கப்பட்ட நபர்கள் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், இந்த கொள்ளைச் சம்பவத்துடன் ஆறுபேர் கொண்ட கொள்ளைக்கும்பல் ஈடுபட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான கொள்ளைச்சம்பவங்கள் கிராமத்தில் அச்சத்தினையும் பரபரப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.

வங்கி ATM இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை!

ஒக். 2 முதல் அதிர்ஷ்டம்

யாழில் வயோதிபத்தாய்க்கு ஏற்பட்ட பரிதாப நிலை…

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  மஹிந்த குடும்பம் மனிதாபிமானமிக்கது - விரைவில் நல்லது நடக்கும்
Previous articleஊரடங்கை தளர்த்துவது தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் இல்லை.
Next articleபிரித்தானியாவில் அதிர்ச்சியை எற்படுத்திய ஆசிரியை கொலை: நீதிமன்றத்தில் ஆஜரான குற்றவாளி