Home CRIME NEWS உணவுக்காக சிறைக்கு சென்ற இளைஞன்;

உணவுக்காக சிறைக்கு சென்ற இளைஞன்;

more news

இந்திய கேரள மாநிலத்தில் இளைஞன், வேலை கிடைக்காத காரணத்தால் உணவுக்காக சிறைக்கு சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றிங்கல் அய்லம் பகுதியை சேர்ந்தவர் பிஜூ (வயது29). இவருக்கு வேலை கிடைக்கவில்லை. அதனால் பணமும் கையில் இல்லை. இதனால் ஒருவேளை உணவு கூட கிடைக்காமல் அவர் கஷ்டப்பட்டு வந்தார்.

இந்தநிலையில், வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் விரக்தியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆற்றிங்கல் பொலிஸ் நிலையம் முன்பு நின்ற பொலிஸ் ஜீப் மீது கல் வீசிதாக்கினார். உடனடியாக பொலிஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சாப்பாட்டுக்காக சிறைக்கு சென்ற வாலிபர்: போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்

3 மாதம் எந்த கஷ்டமும் இல்லாமல் 3 வேளையும் சிறையில் உணவு உட்கொண்டு வந்த அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறையில் இருந்து விடுதலைசெய்யப்பட்டார்.

சிறையிலிருந்து வெளியே வந்தாகிவிட்டது. மீண்டும் உணவுக்கு என்ன செய்வதென்று நினைத்த பிஜூ மீண்டும் பல இடங்களில் வேலை தேடினார். ஆனால் அவருக்கு யாரும் வேலை வழங்க முன்வரவில்லை.

இதனால் பிஜூ ஒருவேளை உணவு உண்பதற்கு கூட வழியில்லாமல் அவதிப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் ஆற்றிங்கல் பொலிஸ் நிலையம் முன்பு நின்ற ஜீப் மீது கல் வீசி தாக்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த  பொலிஸார் அவரை மடக்கி பிடித்து கைது செய்து விசாரித்துள்ளனர்.

விசாரணையில், “வேலை தேடி பல்வேறு இடங்களுக்கும் அலைந்து விட்டேன். ஆனால் வேலை எதுவும் கிடைக்கவில்லை. இதனால் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தவித்து வருகிறேன். சிறைக்கு சென்றால் உணவாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கல்வீசினேன்” என்று கூறியுள்ளார்.

READ MORE >>>  52 KG ஹெரோயினுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி!

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பொலிஸார் வேறு வழியின்றி அவரை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்துள்ளனர்.

யாழில் வயோதிபத்தாய்க்கு ஏற்பட்ட பரிதாப நிலை…

வங்கி ATM இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை!

பிகினி உடையில் அமலாபால்: வைரலாகும் புகைப்படங்கள்!

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

Previous articleஇரண்டாவது மாதிரி பரிசோதனையிலும் பக்டீரியா உறுதி! அஜந்த டி சில்வா
Next articleஅச்சுறுத்தும் நிபா வைரஸ்: தெரிந்து கொள்ள வேண்டியவை!