Home jaffna news மதுபோதையின் உச்சம்; யாழில் கொலைவெறித் தாண்டவம் ஆடிய இளைஞன்: துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்த பொலிசார்!

மதுபோதையின் உச்சம்; யாழில் கொலைவெறித் தாண்டவம் ஆடிய இளைஞன்: துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்த பொலிசார்!

more news

யாழ்ப்பாணத்தில் மதுபோதையின் உச்சத்தின் தாயாரை கொடூரமாக தாக்கிய குடிகார மகனை, துப்பாக்கிப் பிரயோகம் செய்து பொலிசார் கைது செய்ய வேண்டிய நிலைமையேற்பட்டது.

மதுபோதையின் உச்சத்தில் பொலிசாரை வாளால் வெட்ட முயன்ற போதே, பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இளைஞரை கட்டுப்படுத்த நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இன்று (28) காலை கோண்டாவில், செபஸ்ரியன் வீதியில் இந்த சம்பவம் நடந்தது.

மதுபோதையில் இளைஞன் ஒருவர் தனது தாயாருக்கும், அயல்வீட்டினருக்கும் சரமாரியாக தாக்கியுள்ளார். இதையடுத்து, அவர்கள் பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அறிவித்தனர்.

கோப்பாய் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது, பொலிசாரை வெட்டுவதற்கு வாளை எடுத்துக் கொண்டு மதுபோதைய இளைஞன் ஓடி வந்துள்ளார்.

இதையடுத்து, பொலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தி அவரை கட்டுப்படுத்தினர்.

கைதான இளைஞன் தற்போது கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். மதுபோதை உச்சத்தில் இருப்பதால், அவர் நிதானமின்றி காணப்படுவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  2000 ரூபா நிவாரணம் மதுப்பிரியர்களுக்கு வழங்கப்படாதா?
Previous articleயாழில் அபிவிருத்தி உத்தியோகத்தரை காணவில்லை உடன் தொடர்பு கொள்ளுங்கள்!
Next articleவங்கி ATM இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை!