Home Local news வங்கி ATM இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை!

வங்கி ATM இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை!

more news

பொலன்னறுவை மாவட்டம், மின்னேரியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மின்னேரியா குளத்தின் முன்பாக அமைந்துள்ள பல் பொருள் அங்காடியை ஒட்டிய அரச வங்கி ஒன்றின் தானியக்க பணப் பரிமாற்று இயந்திரத்தின் (ATM) பணப் பெட்டகத்தின் உலோகப் பகுதி வெட்டி அகற்றப்பட்டு பெருமளவு கொள்ளையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மின்னேரியா பொலிஸாருக்கு ஹிங்குரங்கொடை அரச வங்கியின் முகாமையாளர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

கொழும்பு – பொலன்னறுவை பிரதான வீதியை ஒட்டி அமைந்துள்ள இந்த அரச வங்கியின் தானியக்க பணப் பரிமாற்று இயந்திரத்திரத்திலிருந்து கொள்ளையிடப்பட்டுள்ள பணம் எவ்வளவு என இன்று (28) நண்பகலாகும் போதும் கணக்கிடப்பட்டிராத நிலையில், சுமார் ஒரு கோடி ரூபா வரையில் கொள்ளையிடப்பட்டிருக்கலாம் என சந்தேகிகப்படுவதாக வங்கியின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

                                                   

இளம் மஞ்சள் நிற ( கிறீம் நிறம்) பட்டா ரக சிறிய ரக லொறியொன்றில் வந்த நபர் ஒருவர் இந்த பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதுடன், கொள்ளையன், குறித்த தானியக்க பணப் பரிமாற்று இயந்திரத்திர கூடத்தில் அமைந்திருந்த சிசிரிவி காட்சிகளையும் உடன் எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.

நேற்று ( 27) முற்பகல் 10 மணிக்கும் நண்பகல் 12.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்துக்குள் இக்கொள்ளை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தன்னை வங்கி அதிகாரியாக காட்டிக்கொண்டுள்ள நபர், தானியக்க பணப் பரிமாற்று இயந்திரத்திர கோளாறை சரி செய்ய வந்தவரைப்போல பாசாங்கு செய்து, இயந்திரத்தின் பணப் பெட்டகப் பகுதி உலோகத்தை, உலோகங்களை வெட்ட பயன்படும் இயந்திரத்தால் வெட்டி இவ்வாறு பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளார்.

READ MORE >>>  யுவதியுடன் சென்று வாய் காட்டிய 2 இளைஞர்கள் கைது

குறித்த அரச வங்கியின் தானியக்க பணப் பரிமாற்று இயந்திரத்திரம் தொழிற்படாமல் இருப்பது தொடர்பில் ஹிங்குராங்கொடை வங்கி முகாமையாளர் தேடிப் பார்த்தபோதே கொள்ளை குறித்த தகவல்கள் வெளிப்பட்டு பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இக்கொள்ளை தொடர்பில் மின்னேரிய பொலிஸாரும் பொலன்னறுவை குற்றத் தடுப்புப் பிரிவினரும் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

யாழில் அபிவிருத்தி உத்தியோகத்தரை காணவில்லை உடன் தொடர்பு கொள்ளுங்கள்!

பிள்ளைகள் பொறுப்பேற்க மறுத்த தாயாரின் பராமரிப்பு செலவை பொறுப்பேற்ற யாழ் தொழிலதிபர்!

“நாட்டில் இந்த ஒரு காரணத்திற்காக ஊரடங்கு நீட்டிக்கப்படலாம்” – ரணில் விக்கிரமசிங்க

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

Previous articleமதுபோதையின் உச்சம்; யாழில் கொலைவெறித் தாண்டவம் ஆடிய இளைஞன்: துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்த பொலிசார்!
Next articleடியன்சின் நகரில் ரவுடிகள் அட்டகாசம்? சாரதி மீது கொலைவெறி தாக்குதல்