Home Indian news பெண் அதிகாரி வல்லுறவு: விமானப்படை அதிகாரிக்கு சிறை!

பெண் அதிகாரி வல்லுறவு: விமானப்படை அதிகாரிக்கு சிறை!

more news

தமிழகத்தின் கோவை பகுதியில் பெண் விமானப்படை அதிகாரி ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தயதாக கூறப்படும் விவகாரத்தில் கைதான விமானப்படை அதிகாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிர்வரும் 30ஆம் திகதி வரைக்கும் நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளது.

கோவை ரெட்பீல்டில் விமானப்படை நிர்வாகவியல் பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு பயிற்சி பெறுவதற்காக டெல்லியை சேர்ந்த 28 வயது பெண் அதிகாரி ஒருவர் வந்தார். அவர், கோவை பொலிஸ் .கொமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் தீபக் எம்.தாமோரை நேரடியாக சந்தித்து புகார் மனு அளித்தார்.

அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்ததாவது ” டெல்லியை சேர்ந்த நான் விமானப்படையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து பயிற்சிக்காக கோவை ரெட்பீல்டில் உள்ள விமானப்படை நிர்வாகவியல் பயிற்சி கல்லூரிக்கு வந்தேன். அங்கு என்னுடன் 30-க்கும் மேற்பட்டவர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.

கடந்த 10ஆம் திகதி நான் பயிற்சியில் ஈடுபட்ட போது எதிர்பாராதவிதமாக எனது காலில் காயம் ஏற்பட்டது. இதற்கான சிகிச்சை எடுத்து கொண்ட நான் அறையில் ஓய்வெடுத்தேன்.அப்போது எனது அறைக்குள் அதே கல்லூரியில் பயிற்சி பெறும் மற்றொரு அதிகாரியான சத்தீஷ்கரை சேர்ந்த அமித்தேஷ் ஹர்முக் (வயது30) என்பவர் அத்துமீறி நுழைந்தார். அவர், என்னை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தார்.

இது பற்றி பயிற்சி கல்லூரியில் உள்ள உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தேன். ஆனால் அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட விமானப்படை அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

READ MORE >>>  இலங்கையின் முழு கடனையும் அடைக்க இதுவே ஒரே வழி!

பெண் அதிகாரி அளித்த புகாரின் பேரில் 376 சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நேற்று முன்தினம் நள்ளிரவில் லெப்டினல் அமிர்தேஷ் என்ற விமானப்படை அதிகாரியை கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.

விமான படை அதிகாரி மீது மாநில காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க முடியாது என அமிர்தேஷ் தரப்பு வழக்கறிஞர் அபிடவிட் தாக்கல் செய்தார். காவல் துறையினர் பதில் அபிடவிட் தாக்கல் செய்ய அவகாசம் கேட்ட நிலையில், விமானபடை அதிகாரி லெப்டினல் அமிர்தேஷை ஓரு நாள் மட்டும் ரிமாண்ட் செய்ய நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து லெப்டினல் அமிர்தேஷ் உடுமலை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவரது ரிமாண்ட் கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் இன்று (28) மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டிருக்கிறார். முன்னதாக பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியும் நீதிமன்றத்தில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார். இந்த வழக்கில் ஆஜராக உள்ள விமானப்படை அதிகாரிகள், குற்றம் சாட்டப்பட்டுள்ள லெப்டினல் அமிர்தேஷை தங்களது கஸ்டடியில் எடுத்து விசாரிக்க கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதேவேளையில் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி மாநில காவல்துறையே இந்த வழக்கை எடுத்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழ்நிலையில் நீதிபதி முன்னிலையில் வழக்கு விசாரணையானது 5 மணி நேரத்திற்கும் மேல் மேலாக நடைபெற்று வந்த நிலையில் கைதானவருக்கு 30ஆம் திகதி வரை நீதிமன்ற காவல் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

சக காவல்துறை உறுப்பினரின் மனைவிக்கு ஆபாச காணொளியை அனுப்பிய காவல்துறை அதிகாரி

Zoom class ல் இருந்த சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்

தமிழ்ப் பெண்கள் இருவர் திருமணம் செய்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

READ MORE >>>  குடும்பஸ்தர் வெட்டிப் படுகொலை! - ஊரடங்கு காலத்தில் தொடரும் கொடூரம்

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

Previous articleசக காவல்துறை உறுப்பினரின் மனைவிக்கு ஆபாச காணொளியை அனுப்பிய காவல்துறை அதிகாரி
Next articleபிள்ளைகள் பொறுப்பேற்க மறுத்த தாயாரின் பராமரிப்பு செலவை பொறுப்பேற்ற யாழ் தொழிலதிபர்!