Home Local news விலை அதிகரிப்பு தொடர்பில் தீர்மானம் எட்டப்படவில்லை!

விலை அதிகரிப்பு தொடர்பில் தீர்மானம் எட்டப்படவில்லை!

more news

பால் மா, எரிவாயு, கோதுமை மா மற்றும் சீமெந்து போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் நேற்று (27) அமைச்சரவை சந்திப்பின் போது எந்தத் தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு தொடர்பான உப குழு சந்திப்பின் போது மேற்படி பொருட்களின் விலை அதிகரிப்புக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் (27) இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பில் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டு சந்தையில் எரிவாயு சிலின்டர்கள் அடங்கலாக பொருட்களை பதுக்கும் நடவடிக்கைகளும் ஆங்காங்கே பதிவாகியிருந்தன.

போதியளவு டொலர் வழங்கப்படாமையால் துறைமுகத்தில் தடைப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிப்பதற்கு மத்திய வங்கியிடமிருந்து அவசியமான நிதியை வழங்குவதற்கு நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது அனுமதி வழங்கப்பட்டதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரிசி விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த நிர்ணய விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலையும் நீக்க தீர்மானிக்கப்பட்டதுடன், சந்தையில் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் 100,000 மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது.

Zoom class ல் இருந்த சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்

அரச ஊழியர்களை பணிக்கு அழைக்க முடிவு! வெளியாகியுள்ள விசேட தகவல்

மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்: வெளியான அதிர்ச்சி பின்னணி!

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

READ MORE >>>  யாழுக்கான விமான சேவை விரைவில் ஆரம்பம்!

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

Previous articleகுறைந்து செல்லும் கொரோனா மரணங்கள்
Next articleதமிழ்ப் பெண்கள் இருவர் திருமணம் செய்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.