Home Local news குழு மோதல்; நால்வருக்கு விளக்கமறியல்

குழு மோதல்; நால்வருக்கு விளக்கமறியல்

more news

குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு குழுக்களுடையில் ஏற்பட்ட மோதலில் சந்தேகநபர்கள் நால்வரை, இம்மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதவான், இன்று (27) உத்தரவிட்டார்.

ஐந்தாம் வட்டாரம், திரியாய் மற்றும் குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 18, 20, 21 மற்றும் 23 வயது இளைஞர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குச்சவெளி பிரதேசத்தில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் நீண்ட காலமாக இருந்து வந்த பகையினால் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது.

இதில் இருவர் படுகாயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவங்களுடன் தொடர்புடைய இரு குழுவில் இருந்தும் சந்தேகநபர்கள் நால்வரை கைது செய்த பொலிஸார், திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  அதிகரிக்கப்பட்ட எரிவாயுவின் விலை திடீரென குறைக்கப்பட்டது!
Previous articleதிடீரென சரிந்த கொரோனா மரணங்கள்!
Next articleநாடு திறப்பது தொடர்பாக 48 மணிநேரத்தில் முக்கிய அறிவிப்பு!