Home Indian news 30க்கும் மேற்பட்டவர்களால் 15 வயது சிறுமி பாலியல் வல்லுறவு

30க்கும் மேற்பட்டவர்களால் 15 வயது சிறுமி பாலியல் வல்லுறவு

more news

இந்திய மகாராஷ்டிர மாநிலத்தில் 15 வயது சிறுமி, 30க்கும் மேற்பட்டவர்களால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக கூறப்படும் சம்பவத்தில் தொடர்புடைய 28 பேரை கைது செய்துள்ள பொலிஸார் ஏனையோரை தேடி வருகின்றனர்.

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது.

தானே மாவட்டம் டொம்பிவிலி பொலிஸ் நிலையத்தில் கடந்த புதனன்று சிறுமி ஒருவர் தன்னை 30க்கும் மேற்பட்டவர்கள் கடந்த 9 மாதங்களாக பாலியல் வன்புணர்வு மற்றும் கூட்டு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி வந்ததாக புகார் அளித்தார்.

rape

15 வயதாகும் அந்த சிறுமி அளித்த புகாரின்படி, கடந்த ஜனவரி மாதம் 29ஆம் திகதியன்று, நண்பர் ஒருவர் அச்சிறுமியை பலவந்தமாக பாலியல் வன்புணர்வு செய்த நிலையில் அதனை அவர் வீடியோவாகவும் எடுத்து வைத்திருக்கிறார். பின்னர் அந்த வீடியோவை வைத்து மிரட்டி அந்த நபர் சிறுமியை சில முறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

பின்னர் சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய வீடியோவை அந்த நபர் தனது நண்பர்கள் சிலருக்கு பகிர்ந்த நிலையில், அவரின் நண்பர்களும், அவர்களுக்கு தெரிந்தவர்கள் என அச்சிறுமியை டொம்பிவிலி, பத்பாபுர், முர்பத் மற்றும் ரபேல் என மாவட்டத்தின் பல இடங்களுக்கு அச்சிறுமியை மிரட்டி வரவழைத்து கூட்டாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளனர். ஒன்றல்ல, இரண்டல்ல இப்படியே 33 பேர் அந்த 15 வயது சிறுமியை நாசம் செய்திருக்கின்றனர்.

அந்த 33 பேரும் 16 முதல் 23 வயதுடையவர்கள், இதில் இருவர் மைனர்கள். சிறுமி அந்த 33 பேரின் பெயர்களையும் பொலிஸாரிடம் கூறியிருந்ததன் பேரில் அதில் 28 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர், எஞ்சியவர்களை பொலிஸார் தேடி வருகிறார்கள்.

READ MORE >>>  ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு திறப்பு

கைதானவர்கள் மீது பாலியல் வல்லுறவு, மீண்டும் மீண்டும் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமை, கூட்டு பாலியல் வல்லுறவு, 16 வயதுக்கு கீழ் இருப்பவர்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமை போன்ற பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது எப்படி?

சிறுமியின் நடவடிக்கைகள் மாறியிருப்பதை பார்த்த அவரின் உறவினர் ஒருவர் இது குறித்து விசாரித்த போது நடந்தவற்றை சிறுமி அவரிடம் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து சமூக செயற்பாட்டாளர் ஒருவரின் உதவியை நாடி இது குறித்து ஆலோசித்த போது, அந்த சமூக செயற்பாட்ட்டாளர் குற்றவாளிகளை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என திட்டம் தீட்டி, சிறுமியை மிரட்டி வந்தவர்களில் ஒருவரை சிறுமியை தொடர்பு கொள்ளச் செய்துள்ளார். அந்த நபர் சிறுமியை குறிப்பிட்ட இடத்துக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்த போது, சிறுமியின் குடும்பத்தினர் ஆட்டோவில் அவர்களை பிந்தொடர்ந்தனர். இந்த நேரத்தில் ஆட்டோ திடீரென பழுதாகி நின்றுவிட சிறுமி தனது இருப்பிட லொகேஷனை ஷேர் செய்த போது குடும்பத்தினர் இது குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

ஆனால் காவலர்கள் அங்கு செலவதற்குள் இருவர் அச்சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியிருக்கின்றனர். 15 வயது சிறுமிக்கு நடந்திருக்கும் இந்த அவலம் பதறவைப்பதாக உள்ளது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  திறந்த ஓரிரு நிமிடங்களில் அலைமோதிய கூட்டத்திற்கு காத்திருந்த ஏமாற்றம்.
Previous articleகுழந்தைக்காக பால் மா திருடியவருக்கு 500000 ரூபா சரீர பிணை
Next articleமாறு வேடத்தில் தலைமறைவாக வாழ்ந்தவர் மானிப்பாய் சுதுமலையில் கைது!