Home Astology இன்றைய ராசி பலன் – 27.09.2021

இன்றைய ராசி பலன் – 27.09.2021

more news

பிலவ வருடம் புரட்டாசி 11 ஆம் தேதி செப்டம்பர் 27,2021 திங்கட்க்கிழமை. சஷ்டி திதி பகல் 03.43 மணி வரை அதன் பின் சப்தமி திதி. ரோகிணி மாலை 05.41 மணிவரை அதன் பின் மிருகஷீரிடம் நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் ரிஷப ராசியில் பயணம் செய்கிறார். துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. சந்திரன் ஆதிக்கம் நிறைந்த திங்கட்க்கிழமையான இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்

உங்கள் ராசிக்கு இரண்டாவது இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வீட்டிற்குத் தேவையான விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரி உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். காதல் விவகாரங்கள் உங்களுக்கு நன்மை தரும். மண வாழ்க்கை மகிழ்ச்சியைத் தரும்.

ரிஷபம்

உங்கள் ராசிக்குள் சந்திரன் பயணம் செய்வதால் நிதானம் தேவை. ரோகிணி நட்சத்திரக்காரர்கள் கோபத்தை கட்டுப்படுத்தவும். உடல் நலம் இன்றைக்கு நன்றாக இருக்கும். பணி செய்யும் இடத்தில் உற்சாகமாக இருப்பீர்கள். உங்களைப் பற்றி தவறாக சிலர் பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள்.

மிதுனம்

உங்கள் ராசிக்கு 12வது இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். தம்பதியர்களுக்குள் அனுசரித்துப் போவது நல்லது. பணம், நகையை கவனமாக கையாளுங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் மறைமுகப் பிரச்னைகள் வரும். உங்களின் உடல் ஆரோக்கியமும், பொருளாதார நிலையும் அற்புதமாக இருக்கும்.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 24.09.2021

கடகம்

ராசிக்கு 11வது இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். லாபஸ்தானத்தில் மனோகாரகன் சந்திரன் அமர்ந்துள்ளதால் குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். உங்களின் வேலையை பலரும் பாராட்டுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். குடும்ப முன்னின்று நடத்துவீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். வேலையில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். காதலில் இன்றைக்கு உற்சாகம் பிறக்கும். வீட்டில் தம்பதியர் ஒற்றுமை அதிகரிக்கும்.

சிம்மம்

ராசிக்கு பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பழைய கடன் பிரச்னை தீரும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். உடல் நலம், பொருளாதார நலம் சுமாராகவே இருக்கும். உங்களைப்பற்றி வதந்திகள் அதிகரிக்கும். காதல் துணையுடனான நினைவுகள் இன்றைக்கு கவலையைத் தரும்.

கன்னி

ராசிக்கு 9வது இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். கணவன்,மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். காதல் துணையுடனான நெருக்கம் அதிகரிக்கும். பணியிடத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். வேலைப்பளு அதிகரிக்கும் இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்டகரமான நாளாக அமையப்போகிறது.

துலாம்

ராசிக்கு 8வது இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் தொடர்வதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலை வந்து நீங்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். வேலை செய்யும் இடத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள் என்றாலும் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.

விருச்சிகம்

ராசிக்கு 7வது இடத்தில் சந்திரன் உச்சம் பெற்று அமர்ந்துள்ளார். களத்திர ஸ்தானத்தில் அமர்ந்துள்ள சந்திரனால் தம்பதியரிடையே நன்மைகள் அதிகரிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவி வழியில் ஆதரவுப் பெருகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். அலுவலகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். உங்கள் துணைக்கு சர்ப்ரைஸ் கொடுத்து அசத்துவீர்கள்.

READ MORE >>>  மகர ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்று

தனுசு

ராசிக்கு 6வது இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு மரியாதைகள் கூடும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். உங்களின் உடல் நலம் இன்றைக்கு நலமாக இருக்கும். வார்த்தைகளில் கடுமையாக இருக்க வேண்டாம். புதிய திட்டங்கள் உங்களுக்கு வெற்றியை தரும்.

மகரம்

ராசிக்கு 5வது இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி புது பொறுப்பை ஒப்படைப்பார். உங்களின் காதல் நினைவுகள் மகிழ்ச்சியை தரும். உங்களின் காதல் விவகாரங்கள், மணவாழ்க்கை மகிழ்ச்சியை தரும். பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். சொத்துப்பிரச்சினை முடிவுக்கு வரும்.

கும்பம்

ராசிக்கு நான்காவது இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். அம்மாவின் உடல் நலனில் அக்கறை தேவை. விருந்தினர் வருகை அதிகரிக்கும். உங்கள் துணையுடன் காதல் உணர்வுகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உற்சாக மனநிலையில் இருப்பீர்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மீனம்

ராசிக்கு மூன்றாவது இடத்தில் முயற்சி ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும். உடன்பிறந்த சகோதரர்களால் நன்மை உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். உங்களின் திருமண வாழ்க்கையில் இன்று மிகச்சிறப்பான நாள். காதல் நினைவுகள் உற்சாகத்தை தரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 11.10.2021

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

Previous articleமனைவி குளிக்க மறுத்ததால் கணவன் எடுத்த அதிரடி முடிவு! சோகத்தில் குடும்பத்தினர்கள்
Next articleதிலீபனின் நினைவால் வெளிவந்த ஈழத்தமிழரின் தொல்லியல் சான்றுகள்