Home jaffna news மாற்றுத்திறனாளி குடும்பத்தின் வாழ்வாதார பயிர்கள் விசமிகளால் நாசம்

மாற்றுத்திறனாளி குடும்பத்தின் வாழ்வாதார பயிர்கள் விசமிகளால் நாசம்

more news

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் உள்ள அரசர் கேணி பகுதியில் மாற்றுத்திறனாளி குடும்பம் ஒன்றினால் தங்களது வாழ்வாதார தொழிலாக பயிரிடப்பட்ட மிளகாய் செடிகள் அனைத்தும் நேற்றிரவு விசமிகளால் பிடுங்கி எறியப்பட்டுள்ளன.

விவசாயத்தை வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டு வரும் குறித்த குடும்பம் இம்முறை 800 மிளகாய் செடிகளை பயிரிட்டுள்ளனர்.

விவசாய உள்ளீடுகள் பற்றாக்குறை, விலைவாசிகளின் ஏற்றம் என பல நெருக்கடிகளுக்குள் மத்தியில் கடன் பெற்றும் தங்களது விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் இவர்கள் பயிரிட்ட மிளகாய்ச் செடிகள் காய்த்துள்ள நிலையில் நாளை திங்கட்கிழமை முதல் காய்களை அறுவடை செய்யத் தயாரான நிலையில் நேற்றிரவு விசமிகளால் அனைத்து மிளகாய்ச் செடிகளும் பிடுங்கி எறியப்பட்டுள்ளன.

இச்சம்பவத்தினால் வறுமைக்குள் விசவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த குறித்த குடும்பம் பெரிதும் மனமுடைந்த நிலையில் காணப்படுகின்றனர்.

தங்களுக்கு தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருகிறது என்றும் ஆனால் எவராலும் இவ்விடயங்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை என்றும் தெரிவிக்கும் குறித்த குடும்பம் இது தொடர்பில் பளை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் உள்ள அரசர் கேணி பகுதியில் மாற்றுத்திறனாளி குடும்பம் ஒன்றினால் தங்களது வாழ்வாதார தொழிலாக பயிரிடப்பட்ட மிளகாய் செடிகள் அனைத்தும் நேற்றிரவு விசமிகளால் பிடுங்கி எறியப்பட்டுள்ளன.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  யாழில் கோவிட் தொற்றால் 8 நாட்களில் 36 பேர் மரணம்
Previous articleநாட்டின் 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
Next articleதிலீபனுக்கு தடை!! பண்டாரநாயக்கவிற்கு அஞ்சலி