Home Local news நாட்டின் 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

நாட்டின் 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

more news

நாட்டில் தென்மேற்கு பகுதிகளில் மழையுடனான வானிலை மற்றும் நாட்டில் பல இடங்களில் பலத்த காற்று அடுத்த 24 மணிநேரங்களுக்கு மேலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது.

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்தமழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவாமாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழையுடனான வானிலை மற்றும் நாட்டில் பல இடங்களில் பலத்த காற்று அடுத்த 24 மணிநேரங்களுக்கு மேலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  கொவிட் தொற்றால் உயிரிழந்த இளைஞன் உயிர்த்தெழுந்த அதிசயம்!
Previous articleதிங்கள் முதல் மருத்துவமனைகளில் இது தான் நடக்கும்!
Next articleமாற்றுத்திறனாளி குடும்பத்தின் வாழ்வாதார பயிர்கள் விசமிகளால் நாசம்