Home Local news மன்னார் காணி சர்ச்சையை வெளிப்படுத்திய ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல்!

மன்னார் காணி சர்ச்சையை வெளிப்படுத்திய ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல்!

more news

மன்னார் மடு பிரதேச செயலக பிரிவில் உள்ள கோவில் மோட்டை காணி விவகாரம் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தியதையடுத்து, அந்த பகுதியிலுள்ள ஊடகவியலாளரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ரௌடிக்குழுவொன்று ஊடகவியலாளரின் வீட்டை தாக்கி சேதம் ஏற்படுத்தியுள்ளது.

தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக மடு பகுதி பங்குத்தந்தைக்கு எதிராக ஊடகவியலாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மடு கோவில் மோட்டை காணி தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக இடம் பெற்று வருகின்றது. அந்த காணியில் நீண்டகாலமாக விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மக்களையே,

தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபட அரச நிர்வாக அதிகாரிகள் அனுமதித்த போதும், மடு தேவாலயத்தின் காணியென கூறி கிறிஸ்தவ பாதிரியார்கள் இடையூறு விளைவிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் விவசாய காணிகளை உழவு செய்ய முற்பட்ட சமயம் கோவில் மோட்டை விவசாயிகளுக்கும், அங்கு சென்ற கிறிஸ்தவ மதகுரு தலைமையிலான குழுவினருக்கும் முரண்பாடு ஏற்பட்டது.

இந்த சம்பவத்தை அறிக்கையிட்ட ஊடகவியளாலர் , சம்பவம் தொடர்பாக மடு தேவலயத்தின் நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு குறித்த மத குருவிடம் கோரியுள்ளார்.

ஆனாலும் குறித்த மத குரு விளக்கம் கொடுக்க மறுத்த நிலையில் தன்னால் சேகரிக்கப்பட தகவலின் அடிப்படையில் குறித்த செய்தியை அறிக்கையிட்டுள்ளார்

செய்தி வெளியாகிய நிலையில்,காணி பிணக்கு சம்பவத்தில் தொடர்புடைய மத குரு தொலைபேசி ஊடாக குறித்த ஊடகவியலளாரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதனபோது, தான் யார் என்பதை காட்டுவேன் என அச்சுறுத்தும் விதமாக பேசியதாக ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்

READ MORE >>>  உன் அக்காவை பகிடிக்கு காதலித்தேன்!! உன் மீதுதான் உண்மைக் காதல்!! யாழ் அரச ஊழியரின் காதல் லீலை!

இதை தொடர்ந்து, நேற்று இரவு ஊடகவியளாலர் இல்லாத நேரத்தில் அவருடைய வீட்டை ரௌடிக்குழுவொன்று சுற்றிவளைத்து, வீட்டின் மீது கற்களை வீசியுள்ளனர். இதனால் வீட்டிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தை அறிந்து அப்பகுதி மக்கள் ஒன்று திரண்ட நிலையில், அந்த ரௌடிக்குழு தலைதெறிக்க தப்பியோடி விட்டது. அவர்களில் சிலரை விரட்டிச் சென்ற பிரதேச மக்கள், அவர்கள் புகுந்த வீடுகளை அடையாளம் கண்டுகொண்டனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாகவும், தன் மீதான அச்சுறுத்தலின் பின்னணியில் மத குருவே இருக்கிறார் என்றும், பாதிக்கப்பட ஊடகவியளாலரால் மடு பொலிஸில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மன்னார் மடு பிரதேச செயலக பிரிவில் உள்ள கோவில் மோட்டை காணி விவகாரம் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தியதையடுத்து, அந்த பகுதியிலுள்ள ஊடகவியலாளரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

Previous articleமன்னாரில் வீதியில் உலர விடப்பட்ட வலையில் சிக்கி கர்ப்பிணிப் பெண் காயம்!
Next articleதிங்கள் முதல் மருத்துவமனைகளில் இது தான் நடக்கும்!