Home Local news வவுனியா சிவானந்தா வித்தியாலயம் வரலாற்று சாதனை.

வவுனியா சிவானந்தா வித்தியாலயம் வரலாற்று சாதனை.

more news

வவுனியா தெற்கு வலயத்தில் அருவித்தோட்டம் சிவானந்தா வித்தியாலயத்தில் 36 மாணவர்கள் உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளதுடன், 90 வீத சித்தியை பெற்று வலயத்தில் இரண்டாம் நிலை பெற்று சாதனை படைத்துள்ளது.

வவுனியா தெற்கு வயலத்தின் செட்டிகுளம் கோட்டத்தில் அமைந்துள்ள அதி கஸ்ட பிரதேச பாடசாலையான அருவித்தோட்டம் சிவானந்தா வித்தியாலயத்தில் இம்முறை 40 பேர் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.அதில் 36 மாணவர்கள் கணித பாடத்துடன் கூடியதாக சித்தி பெற்று உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர்.

வவுனியா தெற்கு வலயத்தில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி சித்தி வீதத்தில் முதல் நிலையில் உள்ளதுடன், பினதங்கிய பாடசாலையான அருவித்தோட்டம் சிவானந்தா வித்தியாலயம் அதிபர் பி.கேமலதன் அவர்களின் வழிகாட்டலில் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான சேவையூடாக 90 வீத சித்தியைப் பெற்று வலயத்தில் இரண்டாம் நிலையைப் பெற்றுள்ளது.

அத்துடன், பின்தங்கிய குறித்த பாடசாலையானது கத்தோலிக்கம், தமிழ், புவியியல், சித்திரம் உள்ளிட்ட 5 பாடங்களில் 100 வீத சித்தியையும், சைவசமயம், விஞ்ஞானம், குடியுரிமைக்கல்வி, சுகாதாரமும் உடற்கல்வியும் ஆகிய பாடங்களிர் 90 வீதத்திற்கு மேற்பட்ட சித்தி வீதத்தையும் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Gallery

யாழ். இந்துக் கல்லூரியின் 56 மாணவர்களுக்கு 9 A; பரீட்சை முடிவுகள் இதோ!

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி பரீட்சையில் புதிய சாதனை!

உயர்தர வகுப்பில் பிரவேசிக்க ஆகக்குறைந்த தகுதி என்ன?

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

READ MORE >>>  பயணத்தடை ஆகஸ்ட் 31 வரை நீடிப்பு!

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

Previous articleவாகனம் வாங்க எதிர்பார்த்துள்ளீர்களா? உங்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!
Next articleவவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயம்