Home Astology இன்றைய ராசி பலன் – 26.09.2021

இன்றைய ராசி பலன் – 26.09.2021

more news

பிலவ வருடம் புரட்டாசி 10 ஆம் தேதி செப்டம்பர் 26,2021 ஞாயிற்றுக்கிழமை, பஞ்சமி திதி பகல் 01.05 மணி வரை அதன் பின் சஷ்டி திதி. கார்த்திகை நட்சத்திரம் பிற்பகல் 02.33 மணிவரை அதன் பின் ரோகிணி நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் ரிஷப ராசியில் பயணம் செய்கிறார். துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. சூரியனின் ஆசி நிறைந்த இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

ரிஷபம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்குள் உச்சம் பெற்று பயணம் செய்கிறார். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் வெற்றிகரமாக அமையும். இன்று குடும்பத்தில் தாராள தன வரவு உண்டாகும். உறவினர்கள் முலம் சுபசெய்திகள் தேடி வரும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் அனுகூலமான பலன்கள் கிட்டும்.

மிதுனம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். பிள்ளைகளால் மனநிம்மதி குறையும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். கடன் பிரச்சினை நீங்கும். எதிலும் நிதானம் தேவை.

READ MORE >>>  இன்றைய ராசிபலன் - 10/07/2021

கடகம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் அமையும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சிகரமான செய்திகள் தேடி வரும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் இரு மடங்கு லாபம் அதிகரிக்கும். போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும்.

சிம்மம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். பூர்வீக சொத்து விற்பனையில் லாபம் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கன்னி

சந்திரன் பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் வரவிற்கேற்ப செலவுகள் அதிகரிக்கும். இன்றைய தினம் உங்களின் புதிய முயற்சிகளுக்கு தடைகள் ஏற்படலாம். தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் கூட்டாளிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.

துலாம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுடைய ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளுடன் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிலும் கவனமும் நிதானமும் தேவை. குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 03.10.2021

விருச்சிகம்

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உறவினர்களால் மனமகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்குவீர்கள்

தனுசு

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். புதிய முயற்சிகள் நற்பலனை தரும். குடும்பத்தில் திடீர் நல்ல செய்தி தேடி வரும், சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும்.

மகரம்

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் உடன்பிறந்தவர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். வியாபார ரீதியான செலவுகளை சமாளிக்க கடன் வாங்குவீர்கள். வேலை செய்யும் இடத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் உதவியால் இதுவரை இருந்த பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். மன நிம்மதி ஏற்படும்.

கும்பம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். சுபமான நாள். உத்தியோகத்தில் இதுவரை இருந்த எதிர்ப்புகள் குறைந்து முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். எதிர்பாராத உதவியால் தேவைகள் பூர்த்தியாகும். இன்று உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும். வியாபார ரீதியாக கூட்டாளிகளுடன் மனஸ்தாபங்கள் உண்டாகும். பேச்சில் நிதானம் தேவைப்படும் நாள்.

READ MORE >>>  இன்றைய ராசிபலன் - 13/06/2021, மகர ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்.

மீனம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் கடினமான காரியங்களை கூட எளிதில் செய்து முடிப்பீர்கள். சுபகாரிய முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆலய வழிபாட்டில் மன ஈடுபாடு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

Previous articleபோதைப்பொருள் பாவிக்க வேண்டாம்; கெட்ட நண்பர்களுடன் சேர வேண்டாம் என்று புத்திமதி சொன்ன போதே, எனது மகன், எனது கண்ணைத் தோண்டிவிட்டான்” – வாழைச்சேனை – தியாவட்டவான் அசனாரின் சோகக்கதை!
Next articleவாகனம் வாங்க எதிர்பார்த்துள்ளீர்களா? உங்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!