Home Tamil News அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் ஒரே ரக (USB-C) சார்ஜர்.

அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் ஒரே ரக (USB-C) சார்ஜர்.

more news

அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் ஒரே மாதிரியான சார்ஜரை தொலைபேசி தயாரிப்பு நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையை அமுல்படுத்தவுள்ளாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இத்தீர்மானது அப்பிள் நிறுவனத்துடன் மோதலொன்றை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது.

ஐரோப்பிய ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தின்படி, ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்பனை செய்யப்படும் அனைத்து ஸ்மார்ட் தொலைபேசிகளும் ஒரே மாதிரியான, அதாவது யூஎஸ்பி-சி (USB-C) ரக சார்ஜரை கொண்டிருக்க வேண்டும்.
இத்தீர்மானமானது இலத்திரனியல் கழிவுகளை குறைப்பதற்கு உதவும் என ஐரோப்பிய ஆணைக்குழு நம்புகிறது.

பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தில் வியாழக்கிழமை (23) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றிய உள்ளக சந்தை ஆணையாளர் தியறி பிரேட்டன்


ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சுமார் 45 கோடி மக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது அப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களில் லைட்னிங் ரக சார்ஜர்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஏனைய போன்களில் மைக்ரோ யூஎஸ்பி மற்றும் யூஎஸ்பி-சி ரக சார்ஜர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஒன்றுடனொன்று பொருந்தாத சார்ஜர்கள் தமது ட்ரோயர்களில் நிறைவது குறித்து ஐரோப்பிய பாவனையாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் என ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறைவேற்றதிகார உப தலைவர் மார்கரேத்தா வெஸ்ட்டேயர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஒரே ரக சார்ஜரை பயன்படுத்த வேண்டும் என நிபந்தனை விதிப்பது புத்தாக்கங்களை தடுப்பதுடன் மாசடைதலை அதிகரிக்கச் செய்யும் என அப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்ஆப் பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

இலங்கையில் வட்ஸ்அப் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

உள்ளாடையோடு போஸ் கொடுத்து அட்டகாசம் செய்யும் அமலாபால்!

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

READ MORE >>>  யாழில் ஆசிரியை திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழப்பு

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

Previous articleநாட்டைத் திறந்ததும் ரயில்கள் இயங்கும்.
Next articleஉள்ளூராட்சி சபைகளின் ஆயுட்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க யோசனை