Home Local news கொழும்பு மருத்துவமனை கைக் குண்டு விவகாரம்; திருகோணமலையில் மேலுமொரு இளைஞன் கைது

கொழும்பு மருத்துவமனை கைக் குண்டு விவகாரம்; திருகோணமலையில் மேலுமொரு இளைஞன் கைது

more news

கொழும்பு நாராஹேன்பிட்டிய தனியார் வைத்தியசாலையிலிருந்து கைக்குண்டொன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் திருகோணமலையில் மேலுமொரு இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய , திருகோணமலை பகுதியில் வைத்து 22 வயதான இளைஞர் ஒருவரை குற்றப் புலனாய்வு பிரிவினர் நேற்று கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர், கைக்குண்டை தயாரிப்பதற்கு உதவி புரிந்துள்ளதாக வெளியான தகவலை அடுத்தே, அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 14ம் திகதி நாராஹேன்பிட்டி பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையிலிருந்து இந்த கைக்குண்டு கண்டெடுக்கப்பட்டது. இதேவேளை கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஏற்கனவே இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருமலை – உப்புவெளி இளைஞனின் மோசமான செயல்!

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் பரபரப்பு!

பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபர் விளக்கமறியலில்

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  மரணங்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிக்கும் அபாயம்!
Previous articleநுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 480 மரணங்கள்
Next articleயாழில் பேருந்து விபத்து – நீண்ட போராட்டத்தின் பின் மீட்கப்பட்ட சாரதி