Home Tamil News 17 வயது சிறுமியை 2 மாதங்களாக வல்லுவுக்குட்படுத்தி உடலில் பச்சை குத்தி சித்திரவதை

17 வயது சிறுமியை 2 மாதங்களாக வல்லுவுக்குட்படுத்தி உடலில் பச்சை குத்தி சித்திரவதை

more news

மொரோக்கோவில் பதின்மர் வயதான சிறுமியை கடத்திச் சென்று 2 மாதங்கள் அடைத்து வைத்திருந்து, பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி, சித்திரவதை செய்தமை தொடர்பில் 11 ஆண்களுக்கு தலா 20 வருட சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆபிரிக்க நாடான மொரோக்கோவில், 2018 ஆம் ஆண்டு அப்போது 17 வயது சிறுமியாக இருந்த கதீஜா (Khadija Okkarou) என்பவர் தனக்கு இழைக்கப்பட்ட கொடூரம் குறித்து வீடியோ ஒன்றின் மூலம் அம்பலமாக்கினார்.

மேற்படி நபர்கள் தன்னை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியயதுடன், தனது உடலில் பலவந்தமாக பச்சை (டாட்டூ) குத்தியதுடன் சிகரெட்டுகளாhல் சுட்டும் சித்திரவதை செய்தனர் என அவர் தெரிவித்தார்.

இவ்விடயம் மொரோக்கோ முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
மேற்படி நபர்கள் மிகப் பயங்கரமானவர்கள் எனவும் அவர்களை தான் ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை எனவும் கதீஜா கூறியிருந்தார்.

மேற்படி குற்றச்செயல்கள் தொடர்பாக, பேனி மெலால் நகரிலுள்ள நீதிமனறத்தில் நடைபெற்ற வழக்கில் 11 ஆண்களுக்கு தலா 20 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது என கதீஜாவின் சட்டத்தரணி இப்ராஹிம் ஹச்சானே புதன்கிழமை (22) தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்கு 2 இலட்சம் திர்ஹாம் (சுமார் 32 இலட்சம் இலங்கை ரூபா) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரு நபர்களுக்கு ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட இரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

எனினும் இத்தண்டனை போதுமானதல்ல எனவும் எனவே தான் மேற்முறையீடு செய்யவுள்ளதாக கதீஜாவின் சட்டத்தரணி இப்ராஹிம் ஹச்சானே கூறினார். இவ்வழக்கில் குற்றவாளிகளுக்கு 30 வருடங்கள் வரையான சிறைத்தண்டனை அளிக்கப்பட முடியும் என அவர் கூறியுள்ளார்.

READ MORE >>>  எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை!

உள்ளாடையோடு போஸ் கொடுத்து அட்டகாசம் செய்யும் அமலாபால்!

15 வயது சிறுமி கூட்டு பாலியல் வல்லுறவு; 26 பேர் கைது!

இளைஞனுக்கு முத்தமிட்டு கன்னத்தை கடித்த பூர்ணா!

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

Previous articleசாதனை படைத்த இரு தமிழ் அரசியல் கைதிகள்!
Next articleகடும் பயணக்கட்டுப்பாடுகளுடன் நாடு வௌ்ளிக்கிழமை திறக்கப்படுகிறது.