Home Astology இன்றைய ராசி பலன் – 25.09.2021

இன்றைய ராசி பலன் – 25.09.2021

more news

பிலவ வருடம் புரட்டாசி 9 ஆம் தேதி செப்டம்பர் 25,2021 சனிக்கிழமை. சதுர்த்தி திதி பகல் 10.36 மணி வரை அதன் பின் பஞ்சமி திதி. பரணி பகல் 11.33 மணிவரை அதன் பின் கார்த்திகை. சந்திரன் இன்றைய தினம் மேஷ ராசியில் மாலை வரை பயணம் செய்கிறார். அதன் பின் ரிஷப ராசிக்கு மாறுகிறார். இன்றைய தினம் கன்னி ராசிக்காரர்களுக்கும் துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்குள் இருந்து இரண்டாம் வீட்டிற்கு பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் தேடி வரும் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். பெரிய மனிதர்களுடன் சந்திப்பு ஏற்படும். நெருங்கிய உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் தேடி வரும். வியாபார ரீதியான பொருளாதார பிரச்சினைகள் குறையும்.

ரிஷபம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்குள் வருகிறார். இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும் வங்கி சேமிப்பு உயரும்.

மிதுனம்

சந்திரன் பயணம் சாதகமாக உள்ளதால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இன்று உறவினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருமானம் உயரும். சுப விரைய செலவுகளும் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவு செய்வீர்கள். பணத்தை சிக்கனமாக செலவு செய்வதன் மூலம் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். குடும்பத்தில் பெண்களுக்கு பொறுப்பு கூடும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.

READ MORE >>>  புத்தாண்டு பலன்கள் - கன்னி ராசி

கடகம்

சந்திரன் லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். கொடுத்த கடன் கைக்கு வந்து சேரும். நினைத்த காரியம் நிறைவேறும். இன்று நண்பர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

சிம்மம்

சந்திரன் பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பொருளாதார நிலை நன்றாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வராத கடன்கள் வசூலாகும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

கன்னி

மாலை வரை சந்திரன் எட்டாம் வீட்டிலும் மாலைக்கு மேல் ஒன்பதாம் வீட்டிற்கும் இடப்பெயர்ச்சியாகிறார். மாலை வரை பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். நண்பர்களோடு தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்வீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். வங்கி சேமிப்பு உயரும்.

துலாம்

சந்திரன் மாலை வரை ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். மாலைக்கு மேல் சந்திரன் எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் உடல்நிலையில் சோர்வும், மந்தநிலையும் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் முடிந்த வரை அமைதியாக இருப்பது நல்லது. சுபகாரிய நிகழ்ச்சிகள் மற்றும் தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 26.09.2021

விருச்சிகம்

சந்திரன் பயணம் சாதகமாக உள்ளது. சந்திரன் பார்வை உங்கள் ராசிக்குக் கிடைப்பதால் இன்று நீங்கள் எந்த காரியத்தையும் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். புதிய சலுகைகளை அறிமுகம் செய்து வியாபாரத்தில் வெற்றி காண்பீர்கள். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சுபகாரியங்கள் கைகூடும்.

தனுசு

சந்திரன் பயணத்தால் கவலைகள் நீங்கும். இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் பெண்களால் சந்தோஷம் உண்டாகும். தொழிலில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி வரும். வீட்டுத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

மகரம்

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்குச் செல்வதால் திடீர் பணவரவு உண்டாகும். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். வெளியூர் பயணங்களால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

கும்பம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பணப் பிரச்சினையில் இருந்து விடுபட சிக்கனமாக செயல்படுவது நல்லது. கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெரியோர்களின் ஆதரவு மனதிற்கு நிம்மதியைத் தரும்.

மீனம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் உள்ளதால் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். இன்று பொருளாதார நெருக்கடிகள் குறைந்து குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கி அனுகூலமான பலன் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

READ MORE >>>  புத்தாண்டு பலன்கள் - ரிஷப ராசி

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

Previous articleஅதிபர் – ஆசிரியர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
Next articleபால்மா, கோதுமைமா, சமையல் எரிவாயு, சீமெந்து விலை அதிகரிப்பு! புதிய விலை விபரங்கள் வெளியாகின.