Home Indian news 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வல்லுறவு; 26 பேர் கைது!

15 வயது சிறுமி கூட்டு பாலியல் வல்லுறவு; 26 பேர் கைது!

more news

இந்திய மராட்டிய மாநிலத்தில் 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக கூறப்படும் சம்பவத்தில் தொடர்புடைய 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் டொம்பிவ்லி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை அவரது ஆண் நண்பன் கடந்த ஜனவரி மாதம் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார். இந்த சம்பவத்தை அந்த ஆண் நண்பன் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளானர். அந்த வீடியோவை தனது நண்பர்களுக்கும் பகிர்ந்துள்ளார்.

இதனை தொடர்ந்து அந்த வீடியோவை வைத்து மிரட்டி அந்த ஆணின் நண்பர்கள் அந்த சிறுமியை பல மாதங்களாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளனர்.

15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 26 பேர் கைது

இந்தச் சிறுமியை 29 பேர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளனர். டொம்பிவ்லி, பெட்லாப்பூர், ரபலி, மூர்பாத் ஆகிய பகுதிகளுக்கு அழைத்து சென்று அந்த சிறுமியை பல மாதங்களாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளனர்.

தான் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதமை குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி நேற்று பொலிஸில் புகார் அளித்துள்ளார்.

குறித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த பொலிஸார் சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாகக் கூறப்படும் 2 சிறுவர்கள் உட்பட 26 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டு பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட சிறுமி கல்வா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் மராட்டியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவியால் மாணவனுக்கு நடந்த கொடூரம்!

பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபர் விளக்கமறியலில்

உள்ளாடையோடு போஸ் கொடுத்து அட்டகாசம் செய்யும் அமலாபால்!

பிகினி உடையில் அதையும் காட்டிய இலங்கை அழகி; வாயைப்பிளந்த ரசிகர்கள்!

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

READ MORE >>>  கடைக்கு சென்ற 18 வயது யுவதியை கடத்தல்

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

Previous articleசுட்டெண் ஞாபகம் இல்லையா? கவலையை விடுங்கள்
Next articleமகனின் விடுதலைக்காக நாமல் ராஜபக்சவிடம் கதறியழுத தாய்