Home Local news ஞானசார தேரரிடம் பல கோரிக்கைகளை முன்வைத்த விவசாயிகள்!

ஞானசார தேரரிடம் பல கோரிக்கைகளை முன்வைத்த விவசாயிகள்!

more news

மன்னார் மடு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கோயில் மோட்டை பகுதிக்கு புதன்கிழமை (22) பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

மடு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கோயில் மோட்டை பகுதியில் சுமார் 40 வருடங்களாக கோவில் மோட்டை பகுதி மக்கள் விவசாயம் செய்து வந்தனர்.

இந்நிலையில் குறித்த அரச காணியை தங்களுக்கு வழங்க வேண்டும் என கோவில் மோட்டை விவசாயிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டதுடன் பல போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்த நிலையில், வட மாகாண ஆளுநர் குறித்த காணியை கோயில் மோட்டை விவசாயிகளுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும் குறித்த காணி தங்களுக்கு வேண்டும் என மடு தேவாலய பரிபாலன சபையினர் கோரி வந்ததுடன் குறித்த காணியை பெற்றுக் கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், கொரோனா இல்லாத இலங்கை உருவாக வேண்டும் என புதன்கிழமை மாலை மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜையில் பங்கேற்க பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

மன்னார் வந்த நிலையில் இடைவழியில், வழிமறித்த கோயில் மோட்டை விவசாயிகள் தங்களின் காணிப் பிரச்சினையை தீர்த்து தருமாறு கோரிக்கை விடுத்ததன் பேரில் கோயில் மோட்டை வயல் காணியை பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் நேரடியாக சென்று பார்வையிட்டனர்.

READ MORE >>>  அபாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இலங்கை!

அதை தொடர்ந்து கருத்து தெரிவித்த பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்

தேவாலயங்களுக்கு காணிகளை வழங்குவதை விட மக்களின் பசியை தீர்ப்பதே முக்கியம் என தெரிவித்ததுடன், குறித்த காணியை கோயில் மோட்டை விவசாயிகளுக்கு பெற்றுத்தர தன்னால் இயன்ற நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்த சென்ற கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் கைது!

யாழில் தொடரும் துயரம்; உடுவில் பிரதேசசெயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் உயிரிழப்பு!

மனைவிக்கு ஏணி கொடுத்த சம்பவம்; அம்பாறையில் பரபரப்பு!

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

Previous articleகைதிகளாக இருக்கும் புலிகளுக்கு விடுதலை!
Next articleசுட்டெண் ஞாபகம் இல்லையா? கவலையை விடுங்கள்