Home Ampara news மனைவிக்கு ஏணி கொடுத்த சம்பவம்; அம்பாறையில் பரபரப்பு!

மனைவிக்கு ஏணி கொடுத்த சம்பவம்; அம்பாறையில் பரபரப்பு!

more news

தங்களின் விருப்பத்துக்கு மாறாக, திருமணம் முடித்துகொண்டமையால், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த குடும்பத்தினார், வீட்டின் சகல கதவுகளையும் இழுத்து மூடிவிட்டனர்.

வீட்டுக்குள் நுழைவதற்கான சகல கதவுகளும் இழுத்து மூடப்பட்டிருந்தமையால், புதிய மனைவியுடன் வந்தவர், அந்த வீட்டில் தான் வசித்த மேல்மாடிக்குச் செல்வதற்காக நீண்டதொரு ஏணியை பயன்படுத்தவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அம்பாறை- உகன பிரதேசத்திலேயே இடம்பெற்றுள்ளது. இதுத்தொடர்பில் உகன பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நானும் என்னுடைய மனைவியும் வீட்டின் மேல் மாடியில் குடியிருக்கின்றோம். அங்குச் செல்வதற்கு வீட்டுக்கு வெளியே படிகள் இல்லை. நான், எனது மனைவியுடன் வீட்டுக்குச் சென்றவேளை, வீட்டின் சகல கதவுகளும் இழுத்து மூடப்பட்டிருந்தன.

தனது தந்தையும் சகோதரிகள் மூவருமே இவ்வாறு கதவுகளை இழுத்து மூடிவிட்டனர் என அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தானும் தன்னுடைய மனைவியும் வீட்டிலிருந்து வெளியே செல்வதற்கு கதவுகளை திறந்து தருமாறும் அந்த முறைப்பாட்டின் ஊடாக அவ்விளைஞன் கோரியுள்ளான்.

30 வயதான அந்த இளைஞன் வெளிநாட்டில் தொழில்புரிந்து வந்துள்ளார். கடந்த ஓகஸ்ட் மாதம் திருமணம் முடித்துள்ளார்.

பேஸ்புக்கின் ஊடாக நண்பர்களாக பழகிய பதுளை யுவதியையே அவ்விளைஞன் திருமணம் முடித்துக்கொண்டுள்ளார். அத்திருமணத்துக்கு இளைஞனின் பெற்றோர், உறவினர்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

READ MORE >>>  ஜெனீவாவிற்கான நாடகமே கிளிநொச்சி இரகசிய OMP

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

Previous articleஇலங்கையில் முடக்க நிலை தளர்த்தப்படுவது தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்
Next articleமின்னல் தாக்கி ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்.