Home Local news மாத்தளை நகரம் நாளை திறக்கப்படும்;

மாத்தளை நகரம் நாளை திறக்கப்படும்;

more news

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அடுத்த மாதம் முதலாம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளதால் மாத்தளை மாவட்ட மக்கள் தமக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களைக் கொள்வனவு செய்வதற்காக, நிவாரணக் காலம் ஒன்றை வழங்க, மாத்தளை மாவட்ட கொரோனா ஒழிப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாளைய தினம் (24) காலை 8 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை மாத்தளை மாவட்டத்திலுள்ள அத்தியாவசிய பொருள்கள் விற்பனை நிலையங்களை மாத்திரம் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே பொருள்களின் விலைப்பட்டியல், கட்டுப்பாட்டு விலை தொடர்பில் வர்த்தக நிலைய உரிமையாளர்களை தெளிவுப்படுத்தும் நடவடிக்கை நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டது.

அதேப்போல் அரிசி, சீனி என்பவற்றை அதிக விலைக்கு விற்றல் மற்றும் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தாத வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாத்தளை மாவட்ட செயலாளர் எஸ்.எம்.ஜீ.கே. பெரேரா தெரிவித்துள்ளார்.

எனவே இன்று அத்தியாவசிய பொருள் கொள்வனவுக்காக வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே வெளியேற முடியும் என்றும் தமக்கு அருகிலுள்ள வர்த்தக நிலையங்களில் மாத்திரம் தமக்கு தேவையானதைப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வாவியில் மிதந்த சடலத்தால் மட்டக்களப்பில் பரபரப்பு!

டெல்டா குறைந்தாலும் மற்றுமொரு ஆபத்து உள்ளது.

திருமணம் முடித்து வெளிநாடு செல்ல இருந்த பெண் மரணம்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

READ MORE >>>  முள்ளிவாய்க்கால் நினைவு தூபி! பணம் அனுப்பிய ஈழத்தமிழன்

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

Previous articleதியாக தீபம் திலீபனின் தூபிக்கு பொலிஸ் பாதுகாப்பு!
Next articleவிபத்தில் ஒருவர் பலி!