Home Tamil News தலைமுடியை வெட்டிய ஆசிரியருக்கு எதிராக தந்தை வழக்கு தாக்கல்!

தலைமுடியை வெட்டிய ஆசிரியருக்கு எதிராக தந்தை வழக்கு தாக்கல்!

more news

அமெரிக்காவில் தனது 7 வயது மகளின் தலை முடியை வெட்டிய ஆசிரியையிடம் 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீடு கேட்டு தந்தை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் மவுன்ட் பிளசன்ட் நகரில் செயல்பட்டு வரும் துவக்க பள்ளியில், ஜிம்மி ஹாப்மேயர் என்பவரது 7 வயது மகள் படித்து வருகிறார். ஒரு நாள் பள்ளியில் இருந்து வரும் போது, அவரது குழந்தையின் தலை முடி ஒரு பக்கம் வெட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து குழந்தையிடம் விசாரித்த போது, உடன் பயிலும் மாணவி ஒருவர் கத்திரியால் தனது முடியை பஸ்ஸில் வரும்போது வெட்டியதாக தெரிவித்துள்ளார்.

கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பலமுறை கத்தரிக்கோலினால் குத்தப்பட்ட சிறுமி..!! டெல்லியை உலுக்கிய இன்னுமொரு பயங்கரம்..!! | Newlanka

இதையடுத்து, இதுகுறித்து அவரது தந்தை பாடசாலை நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். அத்துடன் சிறுமியின் தலை முடியும் அழகு நிலையம் ஒன்றில் சீராக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, இரு நாட்களுக்கு பின்னர் மீண்டும் வீடு திரும்பிய சிறுமியின் தலை முடி மீண்டும் வெட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து தந்தை கேட்டபோது, தலை முடியை சீராக்க ஆசிரியை வெட்டியதாக தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, மிச்சிகனில் உள்ள நீதிமன்றத்தில் இரு நாள்களுக்கு முன்பு ஜிம்மி ஹாப்மேயர் இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம் மற்றும் ஊழியர்களை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், அனுமதி இன்றி முடியை வெட்டியதன் மூலம் தனது கலப்பு இன மகளின் அரசியல் சாசன உரிமை மீறப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியல் சட்ட உரிமைகள் மீறப்பட்டதுடன், இனப் பாகுபாடு காட்டப்பட்டதாகவும், இன ரீதியாக மிரட்டப்பட்டதாகவும், பாடசாலை மாவட்ட நிர்வாகம் தங்கள் ஊழியர்களை முறையாகப் பயிற்றுவிக்கவும், கண்காணிக்கவும், மேற்பார்வையிடவும் தவறியதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

READ MORE >>>  ஒரு மாதத்திற்கு போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளது.

கறுப்பு, வெள்ளை கலப்பினமான ஜிம்மி ஹாப்மேயர், தனது குழந்தையின் முடியை வெட்டிய ஆசிரியையும், சிறுமியும் வெள்ளை இனத்தை சேர்ந்தவர் என தெரிவித்துள்ளார். மேலும், இந்த வழக்கில் சுமார் 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீடு கேட்டுள்ளார்.

முன்னதாக, சம்பவம் தொடர்பான விசாரணையில், தொடர்புடைய ஆசிரியை பள்ளியின் விதிமுறைகளை மீறியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் அவர் இனவெறுப்புடன் செயல்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது. அனுமதியின்றி மாணவியின் முடியை வெட்டியதற்காக அந்த ஆசிரியை எச்சரிக்கப்பட்டுள்ளார். ஆனாலும் அவர் பணியில் தொடர் அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

Previous articleகை துண்டாடப்பட்டு அறுவர் காயமடைந்த சம்பவம்: சந்தேக நபர்கள் பிணையில் விடுவிப்பு!
Next articleஓடிப்போன இளம்ஜோடிக்கு நூதன தண்டனை;