Home jaffna news கை துண்டாடப்பட்டு அறுவர் காயமடைந்த சம்பவம்: சந்தேக நபர்கள் பிணையில் விடுவிப்பு!

கை துண்டாடப்பட்டு அறுவர் காயமடைந்த சம்பவம்: சந்தேக நபர்கள் பிணையில் விடுவிப்பு!

more news

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோண்டாவிலில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின்போது ஒருவரது கை துண்டாடப்பட்டும் மேலும் 6 பேர் படுகாயமடைந்தமை தொடர்பிலும் முக்கிய சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சந்தேக நபர்கள் மூவரும் ஆஜர்படுத்தப்பட்டபோது, கோப்பாய் பொலிஸார் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்காத நிலையில் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டது.

கடந்த ஜூன் 30 ஆம் திகதி கோண்டாவிலில் வீடு ஒன்றுக்குள் புகுந்த அங்கிருந்த 7 பேரை கூரிய ஆயுதங்களினால் தாக்கி படுகாயம் விளைவித்தும் வீட்டிலிருந்த பெறுமதியான பொருட்களை தாக்கிச் சேதப்படுத்தியும் தீவைத்தும் வன்முறையில் ஈடுபட்டதாக கோப்பாய் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பி அறிக்கை தாக்கல் செய்திருந்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் ஏற்கனவே யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

சந்தேக நபர்கள் நால்வரும் கடந்த ஜூலை 5ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த நீதிமன்று உத்தரவிட்டிருந்தது.

எனினும் நாட்டில் ஏற்பட்ட கோவிட்-19 நோய்ப்பரவல் காரணமாக சந்தேக நபர்கள் நால்வரும் ஆகஸ்ட் 19 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய 3 சந்தேக நபர்கள் தலைமறைவாகியிருந்த நிலையில் தமது சட்டத்தரணி ஊடாக அவர்கள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்தனர்.

சந்தேக நபர்கள் மூவரை பிணையில் விடுவிக்க அவர்களது சட்டத்தரணி பிணை விண்ணப்பத்தை நீதிமன்றில் முன்வைத்தார்.

READ MORE >>>  அரிசியின் விலையை அதிகரிக்க முடியாது?

பிணை விண்ணப்பத்துக்கு கோப்பாய் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. அதனால் சந்தேக நபர்கள் மூவரையும் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான 2 ஆள் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

Previous articleதிருமணம் முடித்து வெளிநாடு செல்ல இருந்த பெண் மரணம்.
Next articleதலைமுடியை வெட்டிய ஆசிரியருக்கு எதிராக தந்தை வழக்கு தாக்கல்!